மோடி எந்த அழுத்தத்திற்கும் அடிபணிந்ததில்லை

இந்திய பயணத்திற்கு முன்பாக மாஸ்கோவில் ஆங்கிலசெய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப் நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே வர்த்தகவரிகளை விதிப்பதாக தெரிவித்தார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சாஎண்ணெய் வாங்குவது குறித்த டிரம்பின் விமர்சனத்திற்கு பதிலளித்தவர், அமெரிக்காவே அதன்சொந்த அணுமின் நிலையங்களுக்காக ரஷ்யாவிடம் இருந்து அணுசக்தி பொருட்களை வாங்கிவரும் நிலையில், இந்தியாவிற்கும் அதேசலுகை அளிப்பதில் என்ன தவறு என்று வினவினார்.

இந்தியா – ரஷ்யா இணைந்து செயல்படுவது அமெரிக்கா உட்பட எந்தநாட்டிற்கும் எதிரானது அல்ல என்று விளக்கமளித்த புதின், தானும், பிரதமர் மோடியும் எந்தவித வெளிப்புற அழுத்தத்திற்கும் அடிபணிந்ததில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இந்தியாவும், ரஷ்யாவும் தங்களது சொந்தநலன்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும், எந்தநாட்டிற்கும் தீங்கு இழைக்க மாட்டோம் என்றும் புதின் கூறினார். இந்நிலையில், புதினின் இந்திய பயணத்தை வரவேற்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தியா – ரஷ்யா இடையிலான நட்புறவு இருநாட்டு மக்களுக்கும் மகத்தான நன்மைகளை கொடுத்திருப்பதாக ரஷ்ய மொழியில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் புதினுக்கு சிவப்புகம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பின் அங்கிருந்து ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதிக்கு செல்லும் புதின், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நடைபெறும் உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்கிறார்.

அப்போது ராணுவம், எரிசக்தி, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கபடுகிறது. ரஷ்யாவுடனான வர்த்தக பற்றாக்குறையை களையும் வகையில் இந்தியாவில் இருந்து ரஷ்யாவிற்கு ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக மருந்து, ஆட்டோமொபைல், வேளாண்பொருட்களை அதிகளவில் ஏற்றுமதி செய்வது குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...