தவறு இண்டிகோவிடம் தான் உள்ளது

தவறு இண்டிகோவிடம்தான் உள்ளது என்றும், விரைவில் நிலைமை சீராகிவிடும், ஆனால் விமானநிறுவனம் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி என்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறினார். . பயணிகள் நாளை முதல் பெரியபிரச்சினைகளை எதிர்கொள்ள மாட்டார்கள். இண்டிகோ தனது முழுத்திறனுடன் செயல்பட இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும் என்றும் அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறினார்.

இண்டிகோ விமான நிறுவனத்தில் விமானிகள் பற்றாக்குறையால், விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக் கணக்கான விமான சேவைகள் ரத்து செய்ய பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். தேசிய அளவில் இண்டிகோ பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. மத்திய அரசு உடனே தலையிட வேண்டும் என்று கோரிக்கை வலுத்துவருகிறது.

இந்நிலையில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு என்டிடிவி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்களுக்கு போதுமான ஓய்வுகிடைப்பதை உறுதிசெய்யும் புதிய FDTL விதிமுறைகள் நவம்பர் 1 அன்று நடைமுறைக்கு வந்தது. இதில் மற்ற எந்தவிமான நிறுவனங்களுக்கும் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. இது தவறு இண்டிகோவிடம் தான் உள்ளது.

இந்த பிரச்னை தீர்க்கப்படும் நிலையில் உள்ளது என்று என்னால் உறுதியாக கூறமுடியும். பெருநகர விமான நிலையங்களில் பெரியநெரிசல் ஏற்பட்டது… மேலும் டெல்லி, மும்பை, சென்னை போன்ற பெரும்பாலான பெருநகர விமான நிலையங்களில் கடந்த இரண்டு நாட்களாக இருந்த அனைத்துப் பயணிகளின் பிரச்சனையும் சரியாகும். மற்ற இடங்களிலும் இன்றிரவுக்குள் முடிந்துவிடும். இண்டிகோ மீண்டும் நாளை முதல் குறைந்தளவு பயணிகளுடன் செயல்பாடுகளைத் தொடங்கப் போகிறது.

செயல்பாடுகள் சீரானவுடன், இண்டிகோ நிறுவனத்தினர் பயணிகளின் எண்ணிக்கையை படிபடிப்பாக அதிகரிக்கபோகிறார்கள். எனவே பயணிகள் எந்தப் பிரச்சினையையும் சந்திக்க மாட்டார்கள்… நாளை முதல் நடப்பதைக் காண்பீர்கள். இண்டிகோ தனது முழுமையான செயல்பாட்டிற்கு வருவதற்கு இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும்” என்றார்.

விமான போக்குவரத்து அமைச்சகமோ அல்லது விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான டிஜிசிஏ-வோ (DGCA) நிலைமையை முன்கூட்டியே ஏன் கையாளவில்லை என்ற கேள்விக்கு பதில்அளித்த அமைச்சர் ராம்மோகன் நாயுடு, இது முற்றிலும் தவறு.. விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்களுக்கு போதுமான ஓய்வு கிடைப்பதை உறுதிசெய்யும் புதிய FDTL விதிமுறைகள் நவம்பர் 1 அன்று நடைமுறைக்கு வந்த பின்னர், அமைச்சகமும் ஒழுங்குமுறை அமைப்பும் விமான நிறுவனங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தது என்றார்..

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.