வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா

பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா கோபிநாத் பர்தோலோய் சர்வதேச விமான நிலையத்தின் புதியமுனையக் கட்டிடத்தைத் திறந்துவைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய மோடி, இன்று அசாம் மற்றும் வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் திருவிழா என்று கூறினார். முன்னேற்றத்தின் ஒளி மக்களை சென்றடையும்போது, வாழ்க்கையின் ஒவ்வொரு பாதையும் புதிய உயரங்களை தொடத் தொடங்குகிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். மேலும், அசாமின் முதல் முதலமைச்சரும், மாநிலத்தின் பெருமைக் குரியவருமான கோபிநாத் பர்தோலோயின் சிலையைத் திறந்து வைக்கும் பாக்கியம் தமக்கு கிடைத்ததாக பிரதமர் குறிப்பிட்டார். திரு பர்தோலோய் அசாமின் அடையாளம், எதிர்காலம் மற்றும் நலன்களில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள வில்லை என்றும், அவரது சிலை எதிர்காலச் சந்ததியினருக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து, அவர்களுக்கு அசாம் மீது ஆழ்ந்த பெருமை உணர்வை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

“நவீன விமான நிலைய வசதிகளும் மேம்பட்ட இணைப்பு உள்கட்டமைப்புகளும் எந்தவொரு மாநிலத்திற்கும் புதிய சாத்தியக்கூறுகளுக்கும் வாய்ப்புகளுக்கும் நுழைவாயிலாக அமைகின்றன, மேலும் மக்களிடையே வளர்ந்து வரும் நம்பிக்கை மற்றும் திடமான உணர்வின் தூண்களாக நிற்கின்றன“, என்று பிரதமர் கூறினார். அசாமில் பிரம்மாண்டமான நெடுஞ்சாலைகளும் விமான நிலையங்களும் கட்டப்படுவதை மக்கள் காணும்போது, அசாமிற்கு உண்மையான நீதி இறுதியாக கிடைக்கிறது என்பதை அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று இந்தியா மீதான உலகின்பார்வை மாறியுள்ளது என்றும், இந்தியாவின் பங்கும் மாறியுள்ளது என்றும் மோடி குறிப்பிட்டார். இந்தியா இப்போது உலகின் மூன்றாவது பெரியபொருளாதாரமாக மாறும் பாதையில் உள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். வெறும் 11 ஆண்டுகளில் இது எவ்வாறு சாத்தியமானது என்று அவர் கேள்வி எழுப்பியதுடன், நவீன உள்கட்டமைப்பின் வளர்ச்சி இதில் முக்கியப்பங்கு வகித்துள்ளது என்றும் வலியுறுத்தினார். ஒரு வளர்ச்சியடைந்த நாடு என்ற இலக்கை அடைவதற்காக, உள்கட்டமைப்பில் கவனம்செலுத்தி இந்தியா 2047-ம் ஆண்டிற்காகத் தயாராகி வருவதாக பிரதமர் தெரிவித்தார். இந்த மாபெரும் வளர்ச்சிப் பயணத்தின் மிகமுக்கியமான அம்சம் ஒவ்வொரு மாநிலத்தின் மற்றும் ஒவ்வொரு பிராந்தியத்தின் பங்கேற்புதான் என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். ஒவ்வொரு மாநிலமும் ஒன்றாக முன்னேறி, வளர்ந்த இந்தியா என்ற இலக்கிற்குப் பங்களிப்பதை உறுதிசெய்யும் வகையில், அரசு பின்தங்கிய வர்களுக்கு முன்னுரிமை அளித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். இந்த இலக்கில் அசாமும் வடகிழக்கு மாநிலங்களும் முன்னணியில் இருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். ‘கிழக்கு நோக்கிய கொள்கை‘ மூலம் வடகிழக்கு மாநிலங்களுக்கு முன்னுரிமை வழங்கப் பட்டுள்ளது என்றும், இன்று அசாம் இந்தியாவின் கிழக்கு நுழைவாயிலாக உருவெடுத்துள்ளது என்றும் மோடி தெரிவித்தார். அசாம், இந்தியாவை ஆசியான் நாடுகளுடன் இணைக்கும் ஒருபாலமாகச் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார். இந்தத் தொடக்கம் இன்னும் வெகுதூரம் செல்லும் என்றும், பல துறைகளில் வளர்ச்சியடைந்த இந்தியாவின் ஒரு உந்துசக்தியாக அசாம் மாறும் என்றும் அவர் உறுதிபடக்கூறினார்.

“அசாமும் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களும் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு புதிய நுழைவாயிலாக மாறிவருகின்றன,” பல்துறை இணைப்பு குறித்த தொலைநோக்குபார்வை இந்தப் பிராந்தியத்தின் நிலையையும் திசையையும் மாற்றியமைத்துள்ளது . அசாமில் புதியபாலங்கள் கட்டப்படும் வேகம், புதிய மொபைல் கோபுரங்கள் நிறுவப்படும்வேகம் மற்றும் ஒவ்வொரு வளர்ச்சித் திட்டத்தின் வேகம் ஆகியவை கனவுகளை நனவாக்கி வருவதாக அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நித ...

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையு ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறை- கிரண் ரிஜிஜூ மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை ஒன்றிய ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடை ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடைவுக்கு காரணம் தமிழக அரசுதான் – அஸ்வின் வைஷ்ணவ் தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் க ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது: பிரதமா் மோடி அறிவுரை கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி அறிவித்தார் பிரதமர் மோடி 'செஷல்ஸ் வளர்ச்சிக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத் ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி 197 லட்சம் டன்னாக அதிகரிப்பு இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ...

மருத்துவ செய்திகள்

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...