வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும்

“மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் முடிவுகட்டுவோம். ஊழல் மிகுந்த திரிணமுல் காங்., அரசை ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றுவோம். இந்தமக்கள் விரோத அரசால், மாநிலத்தின் வளர்ச்சி தடைபட்டுள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.

மேற்கு வங்கத்தில் நாடியா மாவட்டத்தில் உள்ள தஹெர்பூர் என்ற இடத்தில், பா.ஜ., பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.இதில் பங்கேற்க கொல்கட்டாவுக்கு விமானத்தில்வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தஹெர்பூருக்கு புறப்பட்டார். கடும் பனிமூட்டத்தால் அங்கு தரையிறங்க முடியவில்லை. இதையடுத்து கொல்கட்டாவுக்கே பிரதமர் மோடி மீண்டும் திரும்பினார். அங்கிருந்தபடி, தொலைபேசிமூலம் தஹெ ர்பூரில் திரண்டிருந்த மக்களிடையே அவர் உரையாற்றினார்.

பிரதமர் மோடி பேசியதாவது: ஆளும் திரிணமுல் காங்., என்னையும், பா.ஜ., வையும் எவ்வளவு வேண்டுமானாலும் எதிர்க்கட்டும். அதுபற்றி கவலை இல்லை. ஆனால், மக்களை பிணையாக வைத்து, அவர்களை துன்புறுத்தி, மேற்கு வங்கத்தின் முன்னேற்றத்தை அக்கட்சி தடுக்ககூடாது. ஊழல், வாரிசு அரசியல், ஓட்டுவங்கி அரசியல் ஆகியவை மாநிலத்தை ஆக்கிரமித்துள்ளன. முதல்வர் மம்தா பானர்ஜியின் இந்த காட்டாட்சிக்கு விரைவில் நாங்கள் முடிவுகட்டுவோம்.

மேற்கு வங்க அரசுக்கு தேவையான நிதியுதவியை அளித்துவருகிறோம். எந்த குறையும் வைக்கவில்லை. ஆனாலும், மாநிலத்தின் அனைத்து துறைகளிலும், ‘கமிஷன் கலாசாரம்’ தலைவிரித்தாடுகிறது. இதனால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கபட்டுள்ளது. மேற்குவங்கத்தை நாட்டிலேயே முதன்மை மாநிலமாக மாற்ற விரும்புகிறேன். இது வெறும் வாக்குறுதி அல்ல; எங்களது நீண்டகால கனவு. அதைநிறைவேற்ற வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.

ஊழல் இல்லாத துாய்மையான ஆட்சியை தருவோம். அதற்கு, பா.ஜ., மற்றும் தே.ஜ., கூட்டணி ஆட்சிநடக்கும் மாநிலங்களே சாட்சி. பீஹாரில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், தேஜ., கூட்டணி அமோக வெற்றிபெற்றது. இது, அடுத்தாண்டு மேற்குவங்கத்திலும் எதிரொலிக்கும். கங்கை நதி பீஹாரில் இருந்து மேற்குவங்கத்தில் பாய்வது போல, பீஹார் தேர்தல் முடிவுகள் மேற்கு வங்கத்திலும் எதிரொலிக்கும்.

மேற்கு வங்கத்தில், ஊடுருவல்காரர்களுக்கு ஆளும் திரிணமுல் காங்., ஆதரவு அளிக்கிறது. அதனால்தான், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிரதிருத்தப் பணியை அக்கட்சி எதிர்க்கிறது. ஊடுருவல்காரர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவோம். இதில் சமரசத்துக்கே இடமில்லை. மேற்குவங்கத்தின் வீதிகளில் இப்போது ஒருமுழக்கம் பலமாக ஒலிக்கிறது. அது, ‘வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும்’ என்ற முழக்கம் தான். திரிணமுல் காங்கிரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர். இது, தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நித ...

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையு ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறை- கிரண் ரிஜிஜூ மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை ஒன்றிய ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடை ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடைவுக்கு காரணம் தமிழக அரசுதான் – அஸ்வின் வைஷ்ணவ் தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் க ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது: பிரதமா் மோடி அறிவுரை கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி அறிவித்தார் பிரதமர் மோடி 'செஷல்ஸ் வளர்ச்சிக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத் ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி 197 லட்சம் டன்னாக அதிகரிப்பு இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ...

மருத்துவ செய்திகள்

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...