ஆளுநர் சாமர்த்தியமாக தப்பித்துவிட்டார்

சட்டசபையில் ஜெயலலிதா அவர்களின் புடவையை கிழிக்க முயன்றார்களே அன்று, அதைத்தான் இப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் விசயத்தில் திமுகவினர் செய்துள்ளனர்!

மைக்-ஆப் செய்தார்கள்! லைவ் தொலைக்காட்சி ஒளிபரப்பை கட் செய்தார்கள்! தேசியகீதம் பாடாமல் தேசத்தை அவமதித்தார்கள்!

அமைச்சர்கள் தயாரித்து வழங்கிய பொய்யுரையை ஆளுநர் ஏற்கமாட்டார் என்பதை தெரிந்துக்கொண்டு, அவர் சட்டசபையில் கண்டணம் தெரிவித்து விடக்கூடாது, என்பதற்காகத்தான் லைவ் ஒளிபரப்பையும் மைக்கையும் கட் செய்தார்கள்!

அன்று இதே ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை, அன்று அமைச்சராக இருந்த பொன்முடி ”போயா” என்று கையை நீட்டி முகத்த கோணலாக வைத்து பேசியதை நாம் பார்த்தோம்! இன்று வீடியோவை ஆப் செய்து வைத்துவிட்டு என்னென்ன செய்தார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை! பாஜக எம்.எல்.ஏ க்களுக்கு வழங்கப்பட்டுள்ள இருக்கைகள் ஒரு ஓரமாக இருப்பதாலும் அவர்களால் கவனிக்க முடியாமல் இருந்திருக்கலாம்! பலரும் எழுந்து நின்றாலும் கவனிக்க முடியாது!

பொன்முடியைப்போல பலரும் செய்திருக்கலாம்! கைகள் நீட்டப்பட்டிருக்கலாம்! தகாத வார்த்தைகள் உதிரப்பட்டிருக்கலாம்! இது புடவை கிழிப்புக்கு இணையான செயலாகும்!

சட்டசபையில் தனது தந்தை கருனாநிதியை மிஞ்சவேண்டும்! பேர் எடுக்கவேண்டும் என்று ஸ்டாலின் நினைத்திருக்கலாம்!

திமுகவை பொறுத்தமட்டில், பல்கலைக்கழகத்தின் உள்ளேயே செய்தது, நடு ரோட்டில்போட்டுத்தள்ளியது, துப்பாக்கி வியாபாரம், கஞ்சா, போதைப்பொருள் வியாபாரம், கள்ளச்சாராய வியாபாரம், எழுத்தாளர்களை வீடு புகுந்து கைது செய்வது, காமராஜர் பிரதமர் நரேந்திரமோடி ஆகிய யோக்கியமான தலைவர்கள் மிது அவதூறு பரப்புவது … இம்மாதிரியான செயல்கள் அனைத்துமே ”பேர்” வாங்கித்தரும் செயல்கள்தான்!

திமுகவை பொறுத்தமட்டில் அவர்களுக்கு நல்லவர்களை பிடிக்காது!

ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் மிகவும் நல்லவராக இருக்கிறார்! நேர்மையானவராக இருக்கிறார்!

பல்கலைக்கழகங்களில் கூடுதலாக சம்பாதிக்க ஸ்டாலின் போட்ட திட்டத்தை தடுத்து நிருத்திவிட்டார்!

அவர் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர்! இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத இந்திய பகை நாடுகளின் சில நபர்களோடு திமுகவுக்கு தொடர்பு இருக்குமோ என்னும் சந்தேகம் உள்ளது! ஆளுநர் அதை எல்லாம் போட்டுக்கொடுத்து பணம் சம்பாதிக்க முடியாமல் தடுத்திருக்கக்கூடும்!

ஆளுநர் மீது திமுக கோபமாக இருக்க இதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது!

திமுக ஒரு பாசிசக்கட்சி!

யாராக இருந்தாலும் விலைக்கொடுத்து வாங்கிவிடுவார்கள்! சில காலங்களுக்கு முன்பாக அரசியல் கட்சி துவங்கப்போவதாக சொன்ன சினிமா நடிகரை வாங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது! வாங்க முடியவில்லை என்றால், அவதூறு பரப்பியோ வேறு ஏதாவது செய்தோ அழிக்கப்பார்ப்பார்கள்!

ஆளுநர்மீது அப்படி ஒரு தாக்குதல் முயற்சிதான் சட்டசபையில் நடந்திருப்பதாக யூகிக்க முடிகிறது!

ஆளுநர் சாமர்த்தியமாக தப்பித்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்!

பெண்கொடுமை, போதைக்கொடுமை, தொழில் புறக்கணிப்பு, ஊராட்சி ஜனநாயம் புறக்கணிப்பு, கோயிலுக்கு எதிரான நடவடிக்கைகள், கல்வித்துறையின் பின்னடைவு ஆகியவற்றை களைந்து, மாநிலம் முன்னேறும் வகையிலான அறிவிப்புகள் உரையில் இருந்திருக்க வேண்டும், என்பது ஆளுநர் வலியுறுத்திய கருத்து!

வரும் மே மாதம் ஆட்சி மாற்றம் நிகழப்போகிறது! ஆளுநர் விரும்பியவாறு அறிவிப்புகளை உரையில் வைத்துவிட்டு போக வேண்டியதுதானே! திமுகவுக்கு சிரமம் எதுவும் இல்லையே!

நன்றி குமரி கிருஷ்ணன் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நித ...

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையு ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறை- கிரண் ரிஜிஜூ மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை ஒன்றிய ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடை ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடைவுக்கு காரணம் தமிழக அரசுதான் – அஸ்வின் வைஷ்ணவ் தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் க ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது: பிரதமா் மோடி அறிவுரை கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி அறிவித்தார் பிரதமர் மோடி 'செஷல்ஸ் வளர்ச்சிக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத் ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி 197 லட்சம் டன்னாக அதிகரிப்பு இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ...

மருத்துவ செய்திகள்

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...