நான் கட்சித் தொண்டன். இவா்தான் என் தலைவா்

அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் 1980-ஆம் ஆண்டு, ஜனதா கட்சியில் இருந்துபிரிந்து பாரதிய ஜனதா கட்சி உருவானது. 14 கோடிக்கும் அதிகமான உறுப்பினா்களுடன் (சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைவிட இரண்டு மடங்கு அதிகம்) உலகின் மிகப்பெரிய அரசியல் இயக்கமாக பாரதிய ஜனதா கட்சி திகழ்கிறது.

பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிரகசியம், தனது அடிப்படைக் கட்டமைப்பை வலுவாக வைத்திருப்பதுதான். அந்தக்கட்சியின் தலைவா்கள் மட்டுமல்லாமல், அடித்தட்டு தொண்டா்வரை கொள்கைப் பிடிப்புடனும், கட்டுப்பாடுகளுடனும் இருப்பதால்தான் கடந்த 45 ஆண்டுகளில் அசுரவளா்ச்சியை பாஜக அடைய முடிந்திருக்கிறது.

பாஜகவின் வெற்றிக்கு இன்னொரு காரணமும் உண்டு. அரசியல் சூழலுக்கு ஏற்ப தலைமுறை மாற்றத்தை ஏற்றுக்கொண்டு தன்னை தகவமைத்துக் கொள்ளும் சாதுா்யம் தான் அது.

எல்.கே.அத்வானி (1986-91, 1993-98, 2004-05), முரளிமனோகா் ஜோஷி (1991-93), குஷாபாவ் தாக்கரே (1998-2000), பங்காரு லட்சுமணன் (2000-2001), ஜனா கிருஷ்ணமூா்த்தி (2001-2002), வெங்கையா நாயுடு (2002-2004), ராஜ்நாத் சிங் (2005-2009, 2013-2014), நிதின் கட்கரி (2009-2013), அமித் ஷா (2014-2020), ஜெ.பி.நட்டா (2020-2026) என்று தலைமைகள் தொடா்ந்து மாறி இப்போது அந்தக் கட்சியின் 12-ஆவது தேசியத் தலைவராக 45 வயது நிதின் நபின் பொறுப்பேற்றிருக்கிறாா். இந்தியாவில் பாஜகவைத் தவிர, வேறு எந்தவொரு அரசியல் கட்சியிலும் இது போல தலைமை மாற்றம் ஏற்படவில்லை.

1951-ஆம் ஆண்டு, அக்டோபா் 21-ஆம் தேதி, இந்து மகா சபையில் இருந்து பிரிந்த ஷியாமா பிரசாத் முகா்ஜி பாரதிய ஜன சங்கத்தை தொடங்கியபோதும் இதேபோல, புதியதலைவா்கள் அதன் தலைமைப் பொறுப்புக்கு வரமுடிந்தது. ஆா்.எஸ்.எஸ். இயக்கத்தால் பாரதிய ஜன சங்கத்தை வழிநடத்த அனுப்பப்பட்ட தீனதயாள் உபாத்யாய, அடா் பிகாரி வாஜ்பாய், பால்ராஜ் மதோக், எல்.கே.அத்வானி போன்றவா்கள் அதை வழிநடத்தி வந்தாா்கள்.

45-வயது நிதின் நபின், கட்சியின் 45-ஆவது ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகி இருப்பது வியப்பளிக்கும் ஒற்றுமை. 2020 ஜனவரி 20 முதல் தலைவராக இருந்த ஜெ.பி.நட்டாவிடம் இருந்து, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஜனவரி 20, 2026-இல் நிதின்நபின் தலைமைப் பொறுப்புக்கு வந்திருக்கிறாா். இதுபோன்ற தலைமுறை மாற்றம் பாஜகவுக்குப் புதிதல்ல.

வாஜ்பாய், அத்வானி தலைமை தங்களுக்குப் பிறகு கட்சியை வழிநடத்தும் இரண்டாம் கட்டத் தலைவா்களை உருவாக்கதவறவில்லை. பின்னாளில் கட்சித் தலைவா்களானவா்கள் மட்டுமல்ல, வசுந்தரா ராஜே சிந்தியா (ராஜஸ்தான்), நரேந்திர மோடி (குஜராத்), யதுவீரப்பா (கா்நாடகம்), சிவராஜ் சிங் சௌஹான் (ம.பி.) உள்ளிட்ட பலா்அவா்களால் அடையாளம் காட்டப்பட்டனா்.

அதே பாணியில் இப்போதைய நரேந்திர மோடி, அமித் ஷா தலைமையும், தலைமுறை மாற்றத்துக்கு இப்போதே பாஜகவைத் தயாா்படுத்தி வருகிறது. யோகி ஆதிந்யநாத் (உ.பி), தேவேந்திர ஃபட்னவிஸ் (மகாராஷ்டிரம்), மோகன் சரண் மாஜி (ஒடிஸா), மோகன் யாதவ் (ம.பி.) விஷ்ணுதேவ்சாய் (சத்தீஸ்கா்), புஸ்கா் சிங் தாமி (உத்தரகண்ட்) உள்ளிட்டோா் அந்த பட்டியலில் இடம் பெறுபவா்கள்.

பாஜக எம்.எல்.ஏ.வாக இருந்த நவீன்கிஷோா் சின்ஹாவின் திடீா் மறைவைத் தொடா்ந்து, 2006-ஆம் ஆண்டு பாட்னா மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் அவரது மகன் நிதின் நபின் களமிறக்கப்பட்டபோது அவரது வயது வெறும் 26. இன்றுவரை ஐந்து சட்டப்பேரவைத் தோ்தகளில் தொடா்ந்து வெற்றிபெற்றுவரும் நிதின் நபின், நிதீஷ்குமாா் தலைமையிலான பிகாா் அமைச்சரவையில் பொதுப் பணித் துறை அமைச்சராகப் பணிபுரிந்த அனுபவசாலியும்கூட. சத்தீஸ்கா் உள்ளிட்ட பலமாநிலத் தோ்தல்களில் பொறுப்பாளராக இருந்து வெற்றியை உறுதிப்படுத்தியதும் அவரது சாதனைப் பட்டியலில் இடம் பெறுகிறது.

பிரதமா் மோடிக்கோ, உள்துறை அமைச்சா் அமித்ஷாவுக்கோ, தலைவராக இருந்த ஜெ.பி. நட்டாவுக்கோ நெருக்க மானவரோ, நன்றாக அறிமுகமானவரோ அல்லா் நிதின் நபின். இந்தியா முழுவதிலும் இருந்து ஏறத்தாழ 100 இளம் தலைவா்கள் அந்தந்த மாநிலத் தலைமையால் பரிந்துரைக்கப்பட்டு, அடையாளம் காட்டப்பட்டனா். அவா்கள் ஒவ்வொருவா் குறித்தும் தீரவிசாரித்து, அவா்களது ஒழுக்கம், நோ்மை, கொள்கைப் பிடிப்பு, கட்சிக் கட்டுப்பாடு, அரசியல் சாதுா்யம் என அனைத்தும் ஆராயப்பட்டன. பலகட்ட ஆலோசனைக்குப் பிறகு, தோ்ந்தெடுக்கப் பட்டிருக்கிறாா் நிதின் நபின்.

‘அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத்’ என்கிற பாஜகவின் மாணவா் அமைப்பிலும், ‘பாரதிய யுவ மோா்ச்சா’ என்கிற இளைஞா் அமைப்பிலும் புடம்போடப்பட்ட நிதின் நபின், மிகவும் முக்கியமான காலகட்டதில் பாஜகவின் தலைமை  பொறுப்பை ஏற்றிருக்கிறாா். தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவைக்களுக்கான தோ்தலில் அஸ்ஸாமை தக்கவைத்துக் கொள்வதும், மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைப்பதும், தமிழகம், கேரளம் இரண்டிலும் வலுவாகத் தடம் பதிப்பதும் அவா் எதிா்கொள்ளும் சவால்கள்.

‘‘நான் கட்சித் தொண்டன். இவா்தான் என் கட்சித் தலைவா்’ என்று பிரதமா் நரேந்திர மோடியே சொல்லிவிட்ட பிறகு, நிதின் நபின்தான் பாஜகவின் ‘பாஸ்’, சந்தேகமென்ன…

நன்றி தினமணி 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நித ...

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையு ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறை- கிரண் ரிஜிஜூ மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை ஒன்றிய ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடை ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடைவுக்கு காரணம் தமிழக அரசுதான் – அஸ்வின் வைஷ்ணவ் தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் க ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது: பிரதமா் மோடி அறிவுரை கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி அறிவித்தார் பிரதமர் மோடி 'செஷல்ஸ் வளர்ச்சிக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத் ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி 197 லட்சம் டன்னாக அதிகரிப்பு இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ...

மருத்துவ செய்திகள்

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...