டெல்லியில் போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி இன்று மரியாதை செலுத்தினார்.
போரின்போது நாட்டுக்காக தங்களது இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவுகூறும்வகையில், 77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி இந்தியா கேட் பகுதியில் உள்ளபோர் வீரர்கள் நினைவிடத்துக்கு பிரதமர்மோடி சென்றார். அங்கு அவரை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தளபதிகள் வரவேற்றனர்.
போர் வீரர்களின் நினைவிடத்தில் மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.
குடியரசு தின விழாவையொட்டி, நாட்டு மக்களுக்கு மோடி குடியரசு தினவாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘எனது சக குடிமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த குடியரசு தின வாழ்த்துகள். இந்தியாவின் மரியாதை, பெருமை மற்றும் மகிமையின் அடையாளமான இந்த மகத்தான தேசிய விழா, உங்கள் வாழ்வில் புதியஆற்றலையும், உற்சாகத்தையும் புகுத்தட்டும். வளர்ந்த இந்தியாவிற்கான உறுதிப்பாடு இன்னும் வலுவாக வளரட்டும். இதுவே எனது இதயப்பூர்வமான விருப்பம்’’ என்று கூறியுள்ளார்.
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |