ஐரோப்பிய ஒன்றியம் வர்த்தக ஒப்பந்தம் 70 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும்

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே வெளிப்படையான வர்த்தகஒப்பந்தம் தொடர்பான ஆலோசனை முக்கிய இடம் பெற்றது.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஐரோப்பிய ஒன்றியம், இந்தியாவின் இரண்டாவது பெரியவர்த்தக கூட்டாளியாக உள்ளது. இந்நிலையில், ‘அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ என பெயரிடப்பட்ட, பெரிதும் எதிர்பார்க்கபட்ட, வெளிப்படையான இந்த சுதந்திர வர்த்தகஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு, இறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கூட்டாக இணைந்து அறிவித்தது.

ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலாவான்டர் லெயன் ஆகிய இருவர் மற்றும் பிரதமர் மோடி முன்னிலையில் இந்தஒப்பந்தம் முடிவானது.

இந்த ஒப்பந்தம் இறுதியானபின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல், தொழிலாளர் விரிவாக்க துறையில் இதனால் 60 முதல் 70 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக கூடும் என்றார்.

அவர் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும்போது, வளர்ச்சி குறைந்தநாடு என்ற அடிப்படையில் வங்காளதேசத்திற்கு வரிவிதிப்பு இல்லை. அதனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் 250 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஜவுளி வர்த்தகத்தில், வங்காளதேசம் 30 பில்லியன் அமெரிக்கடாலர் மதிப்பிலான வர்த்தகம் மேற்கொள்கிறது. அதனை அந்நாடு தன்வசம் பிடித்துவைத்து கொண்டது. ஜவுளி ஏற்றுமதியும் செய்கிறது என்றார்.

இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தபின்னர், 7 பில்லியன் அமெரிக்க டாலர் என்பதில் இருந்து 30 பில்லியன் அமெரிக்க டாலர் முதல் 40 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.3 லட்சத்து 66 ஆயிரம் கோடி) என்ற அளவிற்கு இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி அடையும் .

ஐரோப்பிய யூனியன் 6.5 டிரில்லியன் டாலர் அளவுபொருட்களை இறக்குமதி செய்கிறது. இதில் இந்தியாவின் பங்குகுறைவு. தற்போது 1.5 சதவீதம் மட்டுமே ஐரோப்பாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது. தற்போதைய ஒப்பந்தம்மூலம், புதிய துறைகளில் ஐரோப்பிய யூனியன் சந்தை திறந்துள்ளது. சேவைத்துறையில் இந்தியா வாய்ப்புகளை திறந்துள்ளது. 94 சதவீத கடலோர பொருட்கள் வரி இல்லாமல் ஏற்றுமதிசெய்யப்பட உள்ளது. ஜவுளி, ஆடை, வீட்டு அலங்கார பொருட்கள், தளவாடங்கள் போன்ற இந்தியாவுக்கு அதிக தொழிலாளர் நலன்சார்ந்த துறைகளில் ஐரோப்பிய சந்தை முதல்நாளில் இருந்தே திறந்து இருக்கும்.

விளக்குகள் அல்லது பிற நுகர்வுபொருட்கள் என இருக்கட்டும், நமது ஏற்றுமதிகள் அனைத்தும் முதல் நாளில் இருந்தே வரி இல்லா நிலை ஏற்பட போகிறது. பொம்மைகள், விளையாட்டு பொருட்கள், ரயில்வே, விமான உதிரிபாகங்கள், தோல் மற்றும் காலணித்துறை ஆகியவற்றில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. ஆட்டோ உதிரிபாகங்கள், ஒயின்கள், மதுபானங்கள் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவின் சந்தைதிறந்து இருக்கும்.

இந்தியாவில் பெரும்பாலும் சிறிய அளவிலான மற்றும் குறைந்தவிலை கொண்ட வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலம் இணக்கமான புரிதலுக்கு வர முடிந்தது. சிறிய மற்றும் விலை குறைந்த ஆட்டோமொபைல் துறையில் இந்தியாவின் நலன்களை பாதுகாக்க முடிந்ததில் இந்திய தொழில்துறை மகிழ்ச்சி அடைகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தையும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழில்துறையையும் ஆதரிக்கும் என அவர் கூறினார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...