இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், பெரிய கடல்வாழ் உயிரின உற்பத்தியாளராகவும் திகழ்கிறது. உலகளாவிய மீன் உற்பத்தியில் இந்தியா சுமார் 8 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது.
11,099 கிமீ தொலைவிற்கு கடலோரப் பகுதிகளையும் ஆறுகள், நீர்நிலைகள், ஈர நிலங்கள், மீன்வளர்ப்பு போன்ற நாட்டின் செழுமையான கட்டமைப்புகளைக் கொண்டுள்ள இந்தியா, 3 கோடி பேரின் வாழ்வாதாரங்களுக்கு வழிவகுக்கிறது. அத்துடன் அந்நியச் செலாவணியை ஈட்டுவதில் பெரும் பங்களிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மீன்வளத்துறை சிறந்த வளர்ச்சியைக் கண்டுள்ளது. 2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி இதுவரை இல்லாத அளவாக 197 லட்சம் டன்னாக இரட்டிப்பாக அதிகரித்தது. இது 2013-14-ம் நிதியாண்டில் 95.79 லட்சம் டன்னாக இருந்தது. பொருளாதார ரீதியாக மீன் வளர்ப்புத்துறை அந்நியச் செலாவணியை ஈட்டுவதில் மிகப்பெரிய பங்களிப்பைக் கொண்டுள்ளது.
2024-25-ம் நிதியாண்டில் ரூ.62,408 கோடி அளவிற்கு மீன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில் இறால் வகை முக்கியப் பொருளாகும். இதற்கு அமெரிக்கா, சீனா, ஆகிய நாடுகள் முக்கிய சந்தைகளாக விளங்குகிறது.
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |