ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் எரிவாயுவால் இயக்கப்படும் டர்பைன் ஆராய்ச்சி நிலையத்தை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், 2026 பிப்ரவரி 16 அன்று பார்வையிட்டு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ராணுவத்திற்கான எரிவாயுவால் இயக்கப்படும் டர்பைன் இயந்திர மேம்பாடு தொடர்பான திட்டங்களின் நிலை குறித்து ஆய்வு செய்தார்.

நிறுவனத்தின் திட்டங்கள், இந்திய தொழில்துறை, கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களுடனான தொடர்புகள் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு அளிக்கப்படும் ஆதரவு குறித்து அவருக்கு விளக்கப்பட்டது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பல்வேறு இயந்திரங்கள் மற்றும் அதன் பாகங்கள் இடம் பெற்றுள்ள கண்காட்சியை அவர் பார்வையிட்டார். விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் இடையே உரையாடிய பாதுகாப்பு அமைச்சர், தற்சார்பு மூலம் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதையொட்டி, எரிவாயுவால் இயக்கப்படும் டர்பைன் ஆராய்ச்சி நிலையத்தின் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்தியாவின் உத்திசார்ந்த திறனின் அடித்தளமாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உள்ளது என்று அவர் கூறினார். ஆபரேஷன் சிந்தூர் குறித்து குறிப்பிட்ட திரு ராஜ்நாத் சிங், இந்நடவடிக்கையின் போது, பாதுகாப்புப் படைகள் பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறனை வெளிப்படுத்தினார்கள் என்று குறிப்பிட்டார்.

தகவல் தொடர்பு அமைப்புகள், கண்காணிப்பு உபகரணங்கள் அல்லது தாக்குதலுக்கான ஆயுதங்கள் அனைத்தும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இது நம் மக்களுக்கு பெருமையளிப்பதாகவும், நமது வீரர்களின் மன உறுதிக்கு ஊக்கமளிப்பதாகவும் திரு ராஜ்நாத் சிங் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...