செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்தை மக்​கள் நலனுக்​காக பயன்​படுத்த வேண்​டும் என்று பிரதமர் நரேந்​திர மோடி வலி​யுறுத்தி உள்​ளார். டெல்லி பாரத் மண்​டபத்​தில் செயற்கை நுண்​ணறிவு உச்சி மாநாடு நேற்று முன்​தினம் தொடங்​கியது.

இந்த மாநாட்​டின் 2-வது நாளான நேற்று பல்​வேறு கருத்​தரங்​கு​கள் நடை​பெற்​றன. மாநாடு தொடர்​பாக பிரதமர் மோடி சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதிவு​களில் கூறி​யிருப்​ப​தாவது: அறி​வியல் மற்​றும் தொழில்​நுட்​பங்​களை மக்​கள் நலனுக்​காக        பயன்​படுத்த வேண்​டும்.

குறிப்​பாக செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்தை மக்​களின் நலனுக்​காக ஆக்​கப்​பூர்​வ​மாக பயன்​படுத்த வேண்​டும். டெல்லி மாநாட்​டின் ஒரு பகு​தி​யாக பாரத் மண்​டபத்​தில் சிறப்பு கண்​காட்சி நடை​பெறுகிறது. இதில் புதிய சிந்​தனை​கள், புது​மை​யான கண்​டு​பிடிப்​பு​கள் இடம் பெற்​றுள்​ளன.

உலகின் நன்​மைக்​காக செயற்கை நுண்​ணறிவை வடிவ​மைப்​ப​தில் இந்​திய நிபுணர்​கள் மிகச் சிறப்​பாக பணி​யாற்றி வரு​கின்​றனர். அவர்​களின் திறமை, புதுமை கண்​டு​பிடிப்​பு​கள் டெல்லி கண்​காட்​சி​யில் காட்​சிப்​படுத்​தப்​பட்டு உள்​ளன. செயற்கை         நுண்​ணறிவை மிகுந்த பொறுப்​புடன் பயன்​படுத்த வேண்​டும்.

இவ்​வாறு பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார். மகா​பாரதத்​தில் அறி​வு, ஞானம் தொடர்​பாக கூறப்​பட்​டிருக்​கும்             வாசகங்​களின் ஆடியோவை​யும் பிரதமர் நரேந்​திர மோடி சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்டு உள்​ளார்.

“பு​தி​ய​வை​களை அறிந்து கொள்ள ஆர்​வம் காட்ட வேண்​டும். அவற்றை உன்​னிப்​பாக கேட்​டறிய வேண்​டும். ஆழமாக மனதில் பதிய வைக்க வேண்​டும். அவற்றை மீண்​டும் நினை​வு​கூர வேண்​டும். தீவிர​மாக ஆய்வு செய்ய வேண்​டும். முழு​மை​யான            அர்த்​தத்தை அறிந்து கொள்ள வேண்​டும். உண்​மையை புரிந்து கொள்ள வேண்​டும். இவை அனைத்​தும் ஒன்​றிணைந்​திருப்​பதே ஞானம்” என்று ஆடியோ​வில் கூறப்​பட்டு உள்​ளது.

டெல்லி ஏஐ உச்சி மாநாட்​டின் தொடக்க விழா​வில் பல்​வேறு செயற்கை நுண்​ணறிவு நிபுணர்​களு​டன் பிரதமர் நரேந்​திர மோடி கலந்​துரை​யாடி​னார். பல்​வேறு முக்​கிய அரங்​கு​களை அவர் பார்​வை​யிட்​டார். இவை தொடர்​பான வீடியோவை​யும் பிரதமர் மோடி சமூக வலை​தளத்​தில்​ வெளி​யிட்​டு உள்​ளார்​.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.