ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட்டின் மறுமலர்ச்சி; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம்

கோவை ஈஷாவில் மஹா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. சத்குரு முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில், சத்குரு பேசியதாவது: இந்த உலகில் நீங்கள் எவ்வளவு அதிகமாக நல்ல காரியங்களை செய்கிறீர்களோ, அவ்வளவு தடைகளை சந்திப்பீர்கள். ஆனால், மிக முக்கியமான விஷயம், உங்கள் சொந்த வாழ்க்கையில் நீங்கள் ஒரு தடையாக இருக்கக்கூடாது.

நம்பிக்கை உங்கள் சொந்த மனம், எண்ணம், உணர்ச்சி மற்றும் ஆற்றல்கள் உங்களுக்கே ஒரு தடையாக மாறாமல் இருப்பதை ஒவ்வொருவரும் உறுதி செய்ய வேண்டும். இதை எளிதாக்குவது தான் யோகக் கலை. மனித உடலே ஒரு அதிநவீன வேதியியல் தொழிற்சாலை போன்றது. உங்கள் உடலை நிர்வாகம் செய்யும் ஒரு சிறந்த சி.இ.ஓ-.,வாக நீங்கள் இருந்தால், பேரின்பத்தின் வேதிப்பொருட்களை உற்பத்தி செய்வீர்கள். நீங்கள் ஒரு மோசமான நிர்வாகியாக இருந்தால் கவ லை, மன அழுத்தம், முட்டாள்தனம் ஆகிய தேவையில்லாத விஷயங்களை உற்பத்தி செய்வீர்கள். இதைச் சரி செய்யவே ஆதியோகி வந்தார். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், அவர், 112 முறைகளை வழங்கினார். அதன் மூலம் ஒரு மனிதன் தனது உயர்ந்த சாத்தியத்தை அடைய முடியும். ஆதியோகி கடந்த காலத்தைச் சேர்ந்தவர் அல்ல. அவர் எதிர்காலத்தைச் சேர்ந்தவர். ஏனெனில் அவர் வழங்கியது வெறும் நம்பிக்கைகளோ, தத்துவங்களோ, கோட்பாடுகளோ அல்லது போதனைகளோ அல்ல. அவை மனித நல்வாழ்விற்கான தொழில்நுட்பங்கள். கர்மா என்றால், நமது செயல் அல்லது நமது உருவாக்கம் என்று பொருள். உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது உங்கள் கையில் தான் உள்ளது. நீங்கள் உங்களை எப்படி செதுக்கிக் கொள்கிறீர்கள் என்பதே உங்கள் வெற்றி. இந்த உண்மையை உலகுக்கு உணர்த்தியவர் ஆதியோகி. இவ்வாறு அவர் கூறினார். ஈஷா மஹா சிவராத்திரி விழாவில் இந்தாண்டு முதல், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்த சாதனையாளர்களை அங்கீகரிக்கும் வகையில், பவ்ய பாரத் பூஷண் என்ற பெயரில் விருதுகள் வழங்கப்பட்டன.

அந்த வகையில் இந்தாண்டு விருதுகள் வயலின் கலைஞர் டாக்டர் என்.ராஜம், பரத நாட்டிய கலைஞர் அலர்மேல்வள்ளி, விண்வெளி விஞ்ஞானிகள் நம்பி நாராயணன், கிரண்குமார், வரலாற்றாசிரியர் விக்ரம் சம்பத். மஹா அபிஷேகம் பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து, ஆப்பரேஷன் சிந்துாரில் பங்காற்றிய ராணுவ வீரர்களை அங்கீகரிக்கும் வகையில் ஏர் மார்ஷல் ஜித்தேந்திர மிஷ்ரா, கடற்படை தலைமை அதிகாரி ராகுல் விலாஸ், ராணுவ அதிகாரி ராத்தே உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

ஆதியோகி திருவுருவம் பதித்த, விருது பதக்கங்களை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார். பின் அவர் பேசியதாவது: காசியில் இருந்து நான் வருகிறேன். காசிக்கும், தமிழகத்திற்கும் இருக்கும் தொடர்பு மிகவும் பழமையானது.

காசி உலகின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்று என்றால், தமிழ் பண்பாடோ உலகின் மிகப் பழமையானது. சத்குருவின் வழிகாட்டுதலில், ஈஷாவில் நிகழும் மஹா சிவராத்திரி விழா இன்று சர்வதேச அளவிலான ஆன்மிக கொண்டாட்டமாகவும், பாரத தேசத்தின் பண்பாட்டு மறுமலர்ச்சியின் புதிய பிரகடனமாகவும் விளங்குகிறது. ஈஷா ஹோம் ஸ்கூல் குழந்தைகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆன்மிகத்திலும், விஞ்ஞானத்திலும் இளம் இதயங்களை ஈஷா எப்படி வடிவமைக்கிறது என்பதை பார்த்து மிகவும் மகிழ்ந்தேன். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து இரவு முழுவதும் நடைபெற விழாவில் சத்குரு வழிநடத்திய, சக்தி வாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், யோகேஷ்வர லிங்க மஹா அபிஷேகம் மற்றும் தலைசிறந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன. இசைக்கலைஞர் பிளேஸ், குஜராத் நாட்டுப்புறக் கலைஞர் ஆதித்யா காத்வி, தபேலா இசைக் கலைஞர் பிரசாந்த் சோனாக்ரா, ராஜஸ்தான் நாட்டுப்புறக் கலைஞர் ஸ்வரூப் கான், இசைக்கலைஞர் பாரடாக்ஸ் மற்றும் சவுண்டஸ் ஆப் ஈஷா குழுவினர் இசை நிகழ்ச்சிகளை வழங்கினர். இவ்விழாவில், மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் அமைச்சர் எஸ்,பி. வேலுமணி. பிரேமலதா விஜயகாந்த், சுரேஷ் கோபி, முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மஹா அன்னதானம் வழங்கப்பட்டது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.