கேரளாவின் கும்பமேளா: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

மனதின் குரல் வானொலி உரையில் பிரதமர் மோடி நேற்று கேரள மாநில கும்பமேளா பற்றி பெருமையாகக் குறிப்பிட்டார்.

இதுகுறித்து பிரதமர் கூறியதாவது: கேரளத்​தின் திருச்​சூர் மாவட்டத்​தில் உள்ள ஒரு கிராமத்​தில் ஒரே ஒரு வயலில் மட்டும் 570 வகை​யான நெற்​ப​யிர்​கள் சாகுபடி செய்யப்படுகிறது. இது விதைகளின் மரபைப் பாதுகாக்கும் பேரியக்​கம் ஆகும். உலகின் மிகப்​பெரிய அரிசி உற்​பத்​தி​யாள​ராக இந்​தியா உருவெடுத்திருக்கிறது.

15 கோடி டன்​களுக்​கும் மேலாக அரிசி உற்​பத்தி செய்​வது சாதாரண சாதனை கிடை​யாது. கேரளா​வின் திரு​நா​வாய் கிராமத்தில் பொன்​னானி நதிக்​கரை​யில் பழமை​யான பாரம்பரியம் பின்​பற்​றப்​படு​கிறது, அது​தான் மாமாங்​கம். இதை மகாமக மஹோத்​சவம் அல்​லது கேரள கும்​பமேளா என்கின்றனர்.

எந்​த அறி​விப்​பும் இல்​லாமல் கேரளா​வின் கும்​பமேளா அண்மையில் வெற்​றிகர​மாக நடத்​தப்​பட்டு உள்​ளது. இந்த விழாவுக்​காக விளம்​பரம் செய்​யப்​பட​வில்​லை. வாய்​மொழியாகவே தகவல்​கள் பரி​மாறப்பட்டன. இதன் ​மூலம் பெருந்திரளான மக்​கள் திரு​நா​வாய் கிராமத்​தில் கூடினர்.

வடக்கு முதல் தெற்கு வரை​யில் ஓடும் நதி​கள் வேறாக இருக்கலாம், கரைகள் வேறாக இருக்​கலாம், ஆனால் நம்பிக்கை ஒன்​று​தான்​, இது​தான்​ இந்​தி​யா. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...