தமிழ்நாட்டில் முத்ரா திட்டத்தின் கீழ் 3.6 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன்

தமிழ்நாட்டில் முத்ரா திட்டத்தின் கீழ் 3.6 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கூறியுள்ளார். சென்னையில் இன்று (24 பிப்ரவரி 2026) நடைபெற்ற, மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கான ஒருங்கிணைந்த சேவை முகாமில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் சென்னையில் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பில் சென்னை மேற்கு மாம்பலத்தில் மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கான ஒருங்கிணைந்த இரண்டு நாள் சேவை முகாம் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் உஜ்வாலா இலவச எரிவாயு இணைப்பு, கிசான் கடன் அட்டை, லட்சாதிபதி சகோதரி திட்டத்தின் கீழ் மகளிருக்கு நிதியுதவி, முத்ரா திட்டத்தின் கீழ் கடன் உதவி, ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளைப் பயனாளிகளுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் டாக்டர் எல் முருகன், பிரதமர் திரு நரேந்திர மோடியின் சிறப்பான ஆட்சியில் இந்தியா கடந்த 12 ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவில் வேகமாக முன்னேற்றமடைந்து வருவதாக தெரிவித்தார். உலகிலேயே வேகமாக வளர்ச்சியடைந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது என்றும், நாட்டில் அடிப்படை உள்கட்டமைப்பு, ஏழைகளின் மேம்பாடு ஆகியவற்றைத் தம் இருகண்களாக எண்ணி 2047க்குள் இந்தியா வல்லரசு நாடாக வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டை வழிநடத்தி வருகிறார் என்றும் தெரிவித்தார்.

அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனவைரின் முயற்சி என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் மத்திய அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக சென்னை நகரில் மெட்ரோ ரயில், துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான உயர்மட்ட ஈரடுக்கு நெடுஞ்சாலை உட்பட பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை வழங்கியுள்ளது என்று அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன என்றும், விரைவில் சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு புல்லட் ரயில் கட்டுமானம் தொடங்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டில் ஜீவன் ஜோதி பீமா ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1.2 கோடி பேரும், சுரக்க்ஷா பீமா விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2.8 கோடி பேரும் பயனடைந்துள்ளனர் என்றும், முத்ரா திட்டத்தின் கீழ் 3.6 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

அடல் பென்சன் திட்டத்தின் கீழ் 55 லட்சம் பேரும், சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்டத்தின் கீழ் 6.2 லட்சம் பேரும் பயனடைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். விவசாயிகளுக்கு வழங்கப்படுவதைப் போலவே மீனவர்களுக்கும் கிசான் கடன் அட்டைகள் மூலம் கடன் உதவி வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 40 லட்சம் உஜ்வாலா இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் 1.1 கோடி குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் கிடைக்க வழி கிடைத்துள்ளது என்றும், 1535 மக்கள் மருந்தகங்கள் மூலம் மிகக் குறைந்த விலையில் தமிழ்நாட்டு மக்கள் பொது மருந்துகளைப் பெறுவதாகவும், ஆண்டுக்கு ரூபாய் 5 லட்சம் வரையிலான மருத்துவ காப்பீடு 85 லட்சம் குடும்பங்களுக்கு கிடைத்துள்ளது என்றும், தமிழ்நாட்டில் 22 லட்சம் விவசாயிகளுக்கு விவசாயி கவுரவிப்பு நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

உலகெங்கிலும் தமிழ் கலாச்சாரத்திற்கும், தமிழ் மொழிக்கும், தமிழ்ப் பண்பாட்டிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக திருவள்ளுவர் இருக்கை உள்ளிட்ட பணிகளை பிரதமர் செய்துள்ளார் என்றும் அமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், தெலுங்கானா, புதுச்சேரியின் முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தென்மண்டல தலைமை இயக்குநர் வி பழனிச்சாமி, மத்திய மக்கள் தொடர்பகத்தின் இயக்குநர் ஜெ காமராஜ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...