ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை தாக்கியிருக்கின்றது, இது துருக்கிக்கு மட்டுமல்ல நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்துள்ளது
இஸ்லாமிய நாடுகளில் பாகிஸ்தானிடம் அணுகுண்டு மிரட்டல் இருக்கலாம் அதுவும் வெத்துவேட்டு அதை தவிர பலமான சக்தி ஏதும் பெரிதாக கிடையாது, உண்மையில் இஸ்லாமிய நாடுகளில் சற்று பலமானது துருக்கி அது நேட்டோவில் இருக்கும் நாடு இன்னொரு விஷயம் இந்த போரில் அது கலந்து கொள்ளவுமில்லை, துருக்கி சன்னி நாடு என்றாலும் துருக்கியிடம் அதிகம் மோதியது இல்லை அதன் கவுரவ எதிரி சவுதி மற்றும் கத்தார்
இப்படியான துருக்கி போரில் அமைதி காத்தது முன்பு கடந்தவருடம் அவர்கள் ஜனாதிபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானபோது துருக்கிதான் தன் ஆளில்லா விமானம் மூலம் அவர் உடலை கண்டுபிடித்து கொடுத்தது
அந்த துருக்கியின் நேட்டோ தளத்தை ஈரானிய ஏவுகனை தாக்கியது பெரிய குழப்பத்தை ஏற்படுத்துகின்றது, நேட்டோ ஒப்பந்தபடி துருக்கியினை ஒரு நாடு தாக்கினால் மொத்த நாடுகளும் போரில் குதிக்கும், இதனாலே சதாம் உசேன் கூட அந்த தவறை செய்யவில்லை
இப்போது துருக்கி இறங்குமா இல்லை நேட்டோவே களத்தில் இறங்குமா என்பது தெரியவில்லை
இன்னொரு பக்கம் இந்தியாவில் இருந்து ஈரானுக்கு திரும்பவேண்டிய ஈரானிய போர் கப்பல் இலங்கை பக்கம் 7 நாட்களாக பன்னீர் செல்வம் போல் அலைந்திருக்கின்றது, இதனால் சந்தேகமடைந்த அமெரிக்க நீர்மூழ்கி அதை போட்டு தாக்க 100 பேரோடு அது மூழ்கியிருக்கின்றது
இன்னும் பல குழப்பமான அல்லது எல்லோரையும் வம்புக்கு இழுக்கும் காரியங்களை ஈரான் செய்வது ஏன் என உள்ளே ஈரானிய மேலிடம் இறங்கி பார்த்தால் அரையமயக்கத்தில் மல்லாக்க கிடக்கின்றது அதாவது ஈரானில் சரியான தளபதி இல்லை, முறையான அமைப்பான அதிகாரிகள் இல்லை, கொமேனி கொல்லபட்டபின் வந்திருக்கும் அவர் மகனான கோமேனி இன்னும் முழு அதிகாரமும் பெறவில்லை
ஆனாலும் இப்படி வில்லங்க தாக்குதல்கள் நடக்க காரணம் என்ன என விசாரித்தால் இதெல்லாம் அடிமட்ட தளபதிகள் முடிவு என்கினறன செய்திகள், அதாவது சரியான தலமை இல்லாமல் ஆளாளுக்கு ஒவ்வொரு இடத்தில் தாக்குகின்றார்கள்
இது உண்மையில் குழம்பிய கீழ்மட்ட தளபதிகள் தவறா என்றால் அங்குதான் ஈரான் புரட்சிகாவல் படை அலறுகின்றது, காரணம் இங்கு ஏதோ அந்நிய கும்பல் ஊடுருவி தங்கள் இஷ்டத்துக்கு எல்லோரையும் தாக்கி, யாரை தாக்கினால் ஈரானை போட்டு சாத்துவார்களோ அவர்களை இழுத்துவிடுகின்றது
ஆக ஈரானிய ராணுவத்துக்குள் ஆட்சிக்குள் அந்நிய உளவாளிகள் புகுந்திருப்பதால் போரின் போக்கு திசைமாறுகின்றது, இதுதான் நடக்கும் அத்தனை குழப்பங்களுக்கும் காரணம் என அறிந்த ஈரான் அடுத்து என்ன செய்வது என குழம்பி கிடக்கின்றது
ஈரானின் ராணுவம் இப்படி குழம்பி கிடப்பதால் அது விபரீதமுமாவதால் போரை நிறுத்த ஈரான் முயலலாம் ஆனால் கிடைத்த வாய்ப்பை விட கூடாது என அமெரிக்க தரப்பு ஓங்கி ஓங்கி அடித்து விரைவில் முடிவுக்கு வராவிட்டால் நிலமை இன்னும் இன்னும் மோசமாகும் என போட்டு தாக்குகின்றது
இப்போது இஷ்டத்துக்கு அடிமட்ட தளபதிகள் ஆடுகின்றார்கள் ஆனால் அடிவிழபோவது என்னவோ ஈரானிய ராணுவ வளங்களுக்கும் முல்லா கூட்டத்துக்கும் என்பதால் அவை அடிவாங்க அடிவாங்க இன்னும் இன்னும் அடியுங்கள் என கீழ்மட்ட தளபதிகள் உதவி செய்துகொண்டிருக்கின்றனர் ஈரானின் நிலமை அதன் கட்டுபாட்டிலே இல்லை, போர் அவர்கள் கையில் இல்லாமல் ராணுவத்தில் யார் யாரின் கைகளுக்கோ சென்றிருப்பதால் திகைக்கின்றது ஈரான், ஏன் உச்ச தளபதிகளை இஸ்ரேல் குறிவைத்து தூக்குகின்றது என்றால் இதுதான் காரணம், விரைவில் ஈரானிய வலுவான ராணுவமே குழம்பி சிதறலாம் அதன்பின் மாற்றங்கள் விரைவில் வரலாம்
இன்னும் புரியும்படி சொல்லவேண்டுமானால் தமிழக முதல்வர் வட்டத்துக்குள் ஒரு கும்பல் ஊடுருவி திருப்பரங்குன்றம் முதல் பல விஷயங்களில் தன் இஷ்டத்துக்கு வம்பிழுத்து எல்லா பழியினையும் ஸ்டாலினார் மெல் விழவைத்து ஒன்றும் அறியாதது போல் பக்கத்திலே இருக்கின்றார்களோ அப்படி
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |