ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 கடல் மைல்கள் அதாவது 370 கிலோமீட்டருக்கு வெளியே உலகளாவிய கடற்பரப்பில் நிற்கும் போது அமெரிக்க நீர்மூழ்கி கப்பலால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டுள்ளது..பிப்ரவரி 25 னோடு மிலன் 2026 கடற்படை கூட்டு பயிற்ச்சி முடிந்து விசாகப்பட்டினத்தை விட்டு ஈரான் போர்க்கப்பல் வெளியேறிவிட்டது.
ஐஆர்ஐஎஸ் தேனா போர்க்கப்பலின் கேப்டனிற்கு ஈரான் போரில் நிற்பது தெரியும், அது மீண்டும் இந்தியாவை தொடர்பு கொள்ளவும் இல்லை.நம்மிடம் போர்கால புகலிடமும் கோரவில்லை, ஆனால் இலங்கை காலி துறைமுகத்திற்கு மிக அருகாமையில் இருந்ததால் அங்கே தொடர்பு கொண்டதாகச் சொல்கிறார்கள்.ஆனால், இலங்கை திட்டமிட்டே ஈரான் போர்க்கப்பலுக்கு புகலிடம் தராமல் புறக்கணித்தது என்றும், சிலர் அலட்சியமாக நடந்து கொண்டதால் இந்த தாக்குதல் நிகழ்ந்தது என்றும் கூறுகிறார்கள்..தாக்குதலான பிறகு சம்பிரதாய நிமித்தமாக இந்திய படையும் உதவும் வாய்ப்பு மட்டுமே இங்கே இருந்ததாக கூறுகிறார்கள்.
இதற்கு ஏன் இந்தியா பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது? ஈரான் போர்க்கப்பல் இந்திய எல்லையில் இல்லை, ஈரானோ அல்லது தாக்கப்பட்ட போர்க்கப்பலின் கேப்டனோ இந்தியாவை தொடர்புகொள்ளவும் இல்லை என்கிற போது, இந்தியா வலிய போய் உலகளாவிய எல்லையில் ஈரான் போர்க்கப்பலை காப்பாற்ற வேண்டும் என்பது எந்த அடிப்படையில் பேசப்படுகிறது என புரியவில்லை.
ஈரான் Vs சவுதி, ஈரான் Vs இஸ்ரேல், சவுதி Vs இஸ்ரேல், USA VS ரஷ்யா என்ற மோதல்களின் திரிந்த நிலை இன்று யுத்தமாக வெடித்துள்ளது..சவுதி இஸ்ரேலை முழுவதுமாக ஏற்கவில்லை என்றாலும் அதனுடைய ஈரான் எதிர்ப்பு அதை விஞ்சி தற்காலிக கூட்டணியை அமெரிக்காவின் வழி நிகழ்த்த வைத்திருக்கிறது.
சவூதியுடன் அனைத்து இஸ்லாமிய சன்னி பிரிவு நாடுகளும் அயத்துல்லாக்களின் ஷியா தலைமையிலான ஈரானுக்கு எதிராக போர்கொடி உயர்த்தியுள்ளார்கள்..1000 வருடங்களாக ரூபங்கள் மாறி நடக்கும் சிலுவைப் போராகவும், 1948 களுக்கு பிறகான இஸ்ரேல் Vs பாலஸ்தீன் என்றும், தற்போது Abrahamic accords vs ஈரான் என்றும், ஹமாஸ்-ஹிஸ்புலாக்களுக்கு எதிரான இஸ்ரேல் போராட்டமாகவும் இவற்றில் பல நூற்றாண்டு யுத்தங்கள் சிக்கியுள்ளன..இதற்கும் மேலே USA Vs RUSSIA / சீனா என்ற பலமான போட்டிகள் உள்ளன.
இந்த நேரத்தில் வளைகுடா நாடுகளில் பணிபுரியும், அங்கே இந்தியர்களை மனதில் வைத்தும், அமெரிக்க-இஸ்ரேல் நட்புறவையும் மனதில் வைத்தேதான் ஈரானை அணுகக்கூடிய நிலை உள்ளது..ஈரானின் இந்திய முதலீடுள்ள சபஹர் துறைமுகம் என்பது சீனா பாகிஸ்தானில் உருவாக்கிய குவாடர் துறைமுகத்திற்கு மிக முக்கியமான மாற்று பொருளாதாரப் பாதையாக உள்ளது..மத்திய கிழக்கையும், ரஷ்யாவையும் இந்தியாவுடன் இணைக்கும் மிக முக்கிய வணிகப் பாதை இது.
ஆகவே, இந்த போரில் அதன் புராதன நோக்கத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்..30 வருடங்களுக்குள்ளான அரசியலாக புரிந்து கொண்டோ இஸ்லாமிய நாடு Vs இஸ்ரேல் என்றோ மட்டுமே சுருக்கிப் பார்த்து கருத்து சொல்ல முடியாது..இந்தியா ஆழ்ந்த ராஜரீக நகர்வுகளை மிகுந்த நிதானத்துடன் செய்கிறது..இரண்டாம் உலகப்போருக்கு பிறகு போர்க்கப்பலை அமெரிக்கா மூழ்கடித்ததாக அவர்கள் பேசுகிற மொழியே சிக்கலாக இருக்கிறது.பெர்ஷிய வளைகுடாவைத் தாண்டி இந்தியப் பெருங்கடல் வரை இந்த யுத்ததின் கூறுகள் வந்து நிற்பது எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் இது நகரலாம் என்ற அச்சம் எல்லோருக்குமே உள்ளது.எனவே, இதில் மிகுந்த பொறுமை அவசியம்.
பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது..ஈரானை ஆதரி, அமெரிக்காவை எதிர் என்றோ அல்லது தலைகீழாகச் செய் என்றோ சொல்வதெல்லாம் முட்டாள்தனமானது..ஆனால், இஸ்ரேலோடு தார்மீகமாக நிற்பதன் வழியே, அமெரிக்க யுக்திவழி நட்பின் அடிப்படை மட்டுமே ஈரானின் நட்பை ஒரு போர்காலத்தில் முடித்துவிடாது.இது நமது போரல்ல என்று எவரும் அறிவர்.இந்திய நலனின் நண்பர்கள், அதன் கௌரவத்தோடு நின்றவர்களுடன் அதே மறுமொழியை இந்தியா வழங்கியுள்ளது.ஒரு நுண்ணிய எதிர்காலத்தைக் காட்டுகிறது.தெளிவான சித்திரம் கிடைக்க இன்னும் நாட்களாகும், மெல்லமாக இந்தியா தன் கருத்துக்களை முன் வைக்கும்..
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |