‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி

மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு காணப்பட வேண்​டும் என்று வலி​யுறுத்​திய பிரதமர் நரேந்​திர மோடி, ராணுவ மோதல்​கள் மூலம் எந்​தவொரு பிரச்சனைக்​கும் தீர்வு காண முடி​யாது என்​பதை பின்​லாந்து அதிபர் உடனான சந்​திப்​பின்​போது திட்​ட​வட்​ட​மாகத் தெரிவித்துள்ளார்.

இந்​தி​யா​வுக்கு நான்கு நாள் அரசு​ முறைப் பயண​மாக வந்​துள்ள பின்​லாந்து அதிபர் அலெக்​சாண்​டர் ஸ்டப்​புடன், பிரதமர் மோடி நேற்று விரி​வான பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். அப்போது இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

அதன் பின்​னர் பிரதமர் வெளி​யிட்ட ஊடக அறிக்​கை​யில் கூறியதாவது: இந்​தி​யா​வும் பின்​லாந்​தும் சட்​டத்​தின் ஆட்​சி, பேச்சுவார்த்தை மற்​றும் ராஜதந்​திர வழி​முறை​களில் நம்​பிக்கை கொண்​டுள்​ளன. ராணுவ மோதல்​கள் மூல​மாக மட்​டுமே எந்​தவொரு சிக்​கலுக்​கும் தீர்வு கண்​டு​விட முடி​யாது என்​ப​தில் இரு நாடு​களும் ஒரு​ மித்த கருத்​தைக் கொண்​டுள்​ளன.

உக்​ரைன் விவ​கார​மாக இருந்​தா​லும் சரி, மேற்கு ஆசி​யா​வாக இருந்​தா​லும் சரி, போர்​களை விரை​வாக முடிவுக்​குக் கொண்டு வரு​வதற்​கும், அமை​திக்​கான அனைத்து முயற்​சிகளுக்​கும் நாங்கள் தொடர்ந்து ஆதர​வளிப்​போம். இரு நாடு​களுக்​கும் இடையி​லான டிஜிட்​டல் மயமாக்​கல் மற்​றும் நிலைத்​ தன்மை தொடர்​பான உறவு​களில் இரு​வரும் இணைந்து செயல்​படு​வது என இரு தரப்​பிலும் ஒப்​புக்​கொள்​ளப்​பட்​டது.

செயற்கை நுண்​ணறிவு முதல் 6 ஜி தொலைத்​தொடர்பு வரை, தூய்​மை​யான எரிசக்தி முதல் குவாண்​டம் கம்ப்​யூட்​டிங் வரை, இந்தத் கூட்​டாண்மை இரு நாடு​களிடையே புதிய வேகத்​தை​யும் ஆற்​றலை​யும் வழங்​கும்.

மேலும், இந்​தியா – ஐரோப்​பிய ஒன்​றி​யம் இடையி​லான தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம், இந்​தி​யா​விற்​கும் பின்​லாந்​திற்​கும் இடையி​லான வர்த்​தகம், முதலீடு மற்​றும் தொழில் ​நுட்ப ஒத்​துழைப்பை மேலும் வலுப்​படுத்​தும். இவ்​வாறு பிரதமர் மோடி அறிக்​கை​யில்​ தெரி​வித்​துள்​ளார்​.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...