“உங்கள் தோல்விகளை மறைக்கவே ‘இந்தித் திணிப்பு’ வாதம்…” – முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பதில்

“உங்கள் அரசின் நிர்வாகத் தோல்விகளை மறைப்பதற்காக ‘இந்தித் திணிப்பு’ வாதத்தைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, ஒவ்வொரு இந்திய மொழியையும் வலுவூட்டும் தேசியப் பணியில் இணையுங்கள்” என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறும் ‘திணிப்பு’ என்ற வாதம், அரசியல் தோல்விகளை மறைப்பதற்கான ஒரு முயற்சி. தேசிய கல்விக் கொள்கை உண்மையில், மொழி விடுதலைக்கான ஒரு பிரகடனமாகும்.

ஒவ்வொரு தமிழ்க் குழந்தையும் தமது பெருமைமிக்க மொழியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக, அது தாய்மொழிக்கு முன்னுரிமை அளிக்கிறது. ஒரு நெகிழ்வான கொள்கையை ‘கட்டாய இந்தி’ என்று தவறாக சித்தரிப்பதன் மூலம், நீங்கள் தமிழைப் பாதுகாக்கவில்லை; மாறாக, நமது இளைஞர்கள் பன்மொழித் திறன் கொண்ட உலகளாவிய தலைவர்களாக உருவெடுக்கும் வாய்ப்பை மறுக்கும் தடைகளை உருவாக்குகிறீர்கள்.

பன்மொழித் தன்மையை ஓர் அச்சுறுத்தலாக சித்தரிப்பது தவறானதாகும். கூடுதல் மொழிகளைக் கற்பதால் தமிழ் பலவீனமடைவதில்லை. மாறாக, தமிழ் மொழி பேசுவோர் பன்மொழித் திறன் கொண்டவர்களாகவும், தன்னம்பிக்கை உடையவர்களாகவும், மொழிரீதியாக வலுவூட்டப்பட்டவர்களாகவும் இருக்கும்போது அம்மொழி செழுமையடைகிறது.

தேசிய கல்விக் கொள்கை, அனைத்து மொழிகளையும் சமமாக ஊக்குவிப்பதன் மூலம் அரசியலமைப்பு கோட்பாடுகளை நிலைநிறுத்துவதோடு, தற்போதுள்ள இருமொழி அமைப்பின் வரம்புகளையும் நிவர்த்தி செய்கிறது. சமக்ர சிக்‌ஷா, ஆசிரியர் பயிற்சி, மற்றும் NPST, NMM போன்ற தேசிய கட்டமைப்புகளுடன், DIET-கள் போன்ற நிறுவனங்களை வலுப்படுத்துதல் போன்ற முன்னெடுப்புகளை செயல்படுத்துவதிலும் இது மேலும் கவனம் செலுத்துகிறது.

பரஸ்பர ஒத்துழைப்பு குறித்த உங்கள் கேள்விகள் கள யதார்த்தத்தைப் புறக்கணிக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், காசி தமிழ்ச் சங்கம் முதல் உலக அரங்கம் வரை தமிழ் ஒரு தேசியப் பொக்கிஷமாகப் போற்றப்பட்டு வருகிறது. மத்திய அரசு இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களை இந்திய மொழிகளைக் கற்கத் தீவிரமாக ஊக்குவிக்கும் வேளையில், உங்கள் அரசு பிரிவினைவாத வாக்கு வங்கிப் பிரச்சாரத்துக்காகத் தமிழ் மாணவர்களுக்குப் பல்வேறு வாய்ப்புகளைத் தொடர்ந்து மறுத்து வருகிறது.

உங்களின் வளர்ச்சி பற்றிய பேச்சு வெறும் வெளிவேஷமே. தமிழ்நாட்டில் பிஎம் ஸ்ரீ பள்ளிகளை நிறுவுவதாக உறுதியளித்த பின்னரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து, அதனைத் தடுத்து நிறுத்தியது திமுக அரசுதான்.

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை நிறுவ வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், உங்கள் அரசு கல்வி சமத்துவத்தை விட அரசியல் பிரச்சாரங்களுக்கு முன்னுரிமை அளித்து, அவற்றை தொடர்ந்து தடுத்து வருகிறது.

வேண்டுமென்றே செய்யப்படும் இதுபோன்ற எதிர்ப்பு என்பது வெறும் நிர்வாக மீறல் மட்டுமல்ல. இது, தரமான, தகுதி அடிப்படையிலான கல்வியால் பயனடையக்கூடிய லட்சக்கணக்கான நலிந்த மாணவர்களுக்குச் செய்யும் நேரடித் தீங்காகும்.

இது, தனது மாணவர்களுக்கான நவீன உள்கட்டமைப்பையும், ஆசிரியர்களையும் திறம்படத் தடுத்து நிறுத்தியுள்ளது. மத்திய அரசு நிதியுதவி மற்றும் ஆசிரியர் பயிற்சிக்கு முழுமையாக உறுதியுடன் உள்ளது. ஆனால் உங்கள் நேர்மையற்ற அரசியலால் மாணவர்களின் முன்னேற்றம் தடுக்கப்படுகிறது.

ஒரு முற்போக்கான, அனைவரையும் உள்ளடக்கிய சீர்திருத்தத்தை ‘மொழித் திணிப்பு’ என்று தவறாகச் சித்தரிப்பது, தேவையற்ற அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்தையே கொண்டுள்ளது. உங்களின் உண்மையான கவலை என்பது இக்கொள்கையின் தெளிவு குறித்ததல்ல. மாறாக, முதல்வர் ஸ்டாலின் இதனை அங்கீகரிக்கத் தயங்குவது குறித்ததாகவே இருக்கலாம்.

இதன் மூலம், இந்தியாவின் மொழிப் பன்முகத் தன்மையைப் பாதுகாக்கும் அரசியலமைப்பு உணர்வை அவர் புறக்கணிக்கிறார். நிர்வாகத் தோல்விகளை மறைப்பதற்காக ‘இந்தித் திணிப்பு’ வாதத்தைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, ஒவ்வொரு இந்திய மொழியையும் வலுவூட்டும் தேசியப் பணியில் இணையுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உரு ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உருவாக்க உழைக்கும் அனைவருக்கும் நன்றி” – பிரதமர் மோடி உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) தொடங்கப்பட்ட உலக சுகாதார ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே எங்களது தாரக மந்திரம்: பாஜக 47-வது நிறுவன தினத்தில் பிரதமர் மோடி பெருமிதம் ​பாஜக​வின் 47-வது நிறுவன நாளை முன்​னிட்​டு, நாடு முழு​வதும் ...

மருத்துவ செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...