தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

சென்​னைக்கு 2 நாள் பயண​மாக வந்​துள்ள பிரதமர் மோடி தமிழக பாஜக நிர்​வாகி​களு​டன் முக்​கிய ஆலோ​சனை நடத்​தினார்.

தமிழகம் மற்​றும் புதுச்​சேரி உள்​ளிட்ட 5 மாநிலங்​களுக்​கான சட்​டப்​பேர​வைத் தேர்​தல் களம் சூடு​பிடிக்​கத் தொடங்​கி​யுள்​ளது. இந்​திய தேர்​தல் ஆணை​யம் கடந்த மார்ச் மாதம் தேர்​தல் தேதியை அறி​வித்​ததைத் தொடர்ந்​து, தமிழகத்​தில் வரும் 23-ம் தேதி வாக்​குப்​ப​திவு நடை​பெறவுள்​ளது. வேட்​புமனுத் தாக்​கல் விறு​விறுப்​பாக நடை​பெற்று வரும் நிலை​யில், அரசி​யல் களம் இப்​போதே உச்​சகட்​டப் பிரச்​சா​ரத்​தால் சூடு​பிடிக்​கத் தொடங்​கி​யுள்​ளது.

புதுச்​சேரி​யில், தேசிய ஜனநாயகக் கூட்​டணி வேட்​பாளர்​களுக்கு ஆதர​வாகப் பிரச்​சா​ரம் செய்ய பிரதமர் நரேந்​திர மோடி நேற்று டெல்​லி​யில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்​தார். அங்​கிருந்து ஹெலி​காப்​டர் மூலம் புதுச்​சேரி சென்ற அவர், அங்கு நடை​பெற்ற பிரம்​மாண்ட ரோடு ஷோவில் பங்​கேற்​றார். பிரச்​சா​ரத்தை முடித்​துக்​கொண்டு நேற்​றிரவு மீண்​டும் சென்னை திரும்​பிய அவரை, பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், மத்​திய அமைச்​சர்​கள் பியூஸ் கோயல், எல்​.​முரு​கன் உள்​ளிட்ட முக்​கிய தலை​வர்​கள் வரவேற்​றனர்.

விமான நிலை​யத்​தில் இருந்து கார் மூலம் கிண்​டி​யில் உள்ள நட்​சத்​திர விடு​திக்​குச் சென்ற பிரதமர் மோடி, கட்​சி​யின் முக்​கிய நிர்​வாகி​களை சந்தித்தார். அப்போது சில முக்​கிய அம்​சங்​கள் விவா​திக்​கப்​பட்​ட​தாகத் தெரி​கிறது. தமிழகத்​தில் பாஜக சார்​பில் போட்​டி​யிடும் வேட்​பாளர்​களின் வெற்றி வாய்ப்​பு​கள் மற்​றும் கள நில​வரம் குறித்து அப்​போது அவர் கேட்​டறிந்​தார்.

இந்நிலையில் இன்று காலை 11 மணி​யள​வில் நடைபெறும் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்​தில் அடுத்​தகட்​டப் பிரச்​சா​ரத்தை பிரம்​மாண்ட பொதுக்​கூட்​ட​மாக நடத்​து​வதா அல்​லது மக்​களு​டன் நேரடி​யாக உரை​யாடும் வகை​யில் ‘ரோடு ஷோ’ ஆக நடத்​து​வதா என்​பது குறித்து ஆலோ​சிக்​கப்​ப​ட உள்ளது.

மேலும் ஏப்.15-ம் தேதியன்று கன்னியாகுமரியில் பிரதமர் பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. பாஜக போட்​டி​யிடும் தொகு​தி​களில் மேற்​கொள்​ளப்பட வேண்​டிய தேர்​தல் வியூ​கங்​கள் குறித்​தும் அப்போது விரி​வாக விவா​திக்​கப்​ப​ட உள்ளது.

இந்தக் கூட்டத்தில், மாநிலத் தலைவர் நயி​னார் நாகேந்​திரன், இணையமைச்சர் எல்​.​முரு​கன், முன்னாள் மாநிலத் தலைவர்கள் அண்​ணா​மலை,தமிழிசை உள்பட தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக் கட்​சித் தலை​வர்​களையும் பிரதமர் சந்திக்க உள்ளதாகத் தெரிகிறது. பின்​னர், ஆலோ​சனைகளை முடித்​துக் கொண்​டு, இன்று பிற்பகலில் சென்​னை​யில் இருந்து கேரளா​வுக்கு புறப்​பட்​டுச் செல்​கிறார்.

பிரதமரின் வரு​கை​யையொட்டி சென்​னை​யில் பலத்த பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. தமிழக தேர்​தல் களத்​தில் பிரதமரின் இந்த அடுத்​தடுத்த நகர்​வு​கள் அரசி​யல் வட்​டாரத்​தில்​ பெரும்​ எதிர்​பார்​ப்​பை ஏற்​படுத்​தியுள்​ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...