வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு

வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) நிலத்தை மாற்றித் தர தனது அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மேற்குவங்க முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கொல்கத்தாவில் செய்தியாளர் களிடம் பேசிய மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி, “வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு நிலத்தை மாற்றித்தர மேற்கு வங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இப்பணிகள் இன்றிலிருந்து தொடங்குகின்றன; 45 நாட்களுக்குள் நிறைவுபெறும். இது எனதுஅரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவாகும்.

மத்திய அரசின் முதன்மைத் திட்டமான ‘ஆயுஷ்மான் பாரத்’ சுகாதாரத்திட்டம் மற்றும் மத்திய அரசின் வேறுபல திட்டங்களையும் மாநிலத்தில் அமல்படுத்தவுள்ளோம். தேர்தல் பிரச்சாரத்தின்போது மத்திய உள்துறைஅமைச்சர் அமித் ஷா அளித்த வாக்குறுதியின்படி, பள்ளி வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான வயதுவரம்பை ஐந்து ஆண்டுகள் நீட்டிக்கும் முன்மொழிவுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய மற்றும் மாநிலப் பணிப் பிரிவுகளின் கீழ் வரும் அதிகாரிகளுக்கு மத்திய அரசு வழங்கும் பயிற்சிகளைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள, தலைமைச் செயலாளருக்கு அமைச்சரவை அதிகாரம் அளித்துள்ளது.

முந்தைய அரசு அரசியலமைப்பை மீறி ‘பாரதிய நியாய சம்ஹிதா’ சட்டத்தை அமல்படுத்தவில்லை. தற்போது அச்சட்டத்தை மாநிலத்தில் அமல்படுத்த அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் ஜூன் 2025-இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக வெளியிட்ட சுற்றறிக்கையை முந்தைய அரசு புறக்கணித்திருந்தது. தற்போது மேற்குவங்க அமைச்சரவை, அச்சுற்றறிக்கையை உடனடியாக அமல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது” என்று அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...