ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி

தலைப்பை படித்தவுடன்…. சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க முடியுமா என்று நீங்கள் கேட்கலாம்.. அதைப்பற்றி கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்..

ஆச்சாரியா பிரமோத் கிருஷ்ணம்..

இவர் 2019 ஆம் ஆண்டு லக்னோ தொகுதியில் காங்கிரஸ்சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்தவர். ஆனால் சமீபத்தில் (2024) காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்.
காரணம்… ஒழுங்கு நடவடிக்கையாம்..

ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு அவர் என்னசெய்தார் என்று தேடிப் பார்க்கும்போது சில விஷயங்கள் நம்கண்ணில் தென்பட்டது..ராமர் கோவில் விசயத்தில் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி அவர்களை பாராட்டி இருக்கிறார். பிரதமர் மோடியை நேரில் சந்தித்து…. தான் கட்டி எழுப்பப்போகும் கல்கி கோவிலுக்கு அடிக்கல்நாட்ட அவருக்கு அழைப்பு விடுத்தார். இது நடந்த சிலநாட்களிலேயே… 32 வருடங்களாக காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து விட்டது.

இந்நேரம் அனேகமாக நீங்களே கூட்டி கழித்து பார்த்திருப்பீர்கள்.. சரி அதைவிடுங்கள்… விஷயத்துக்கு வருவோம். இப்போது ஆச்சாரியா பிரமோத் அவர்கள் ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்…

அதாவது ராமர் கோவில் பற்றியதீர்ப்பு வந்த அன்று…. ராகுல் காந்தி தனக்கு மிக நெருக்கமானவர்களோடு ஒருஆலோசனை நடத்தியதாகவும் ….அப்போது நாம் ஆட்சிக்கு வந்தால் ஒரு சூப்பர்பவர் கமிஷன் அமைத்து, ராமர் கோவில் தொடர்பான தீர்ப்பை திருத்தி அமைத்து விடலாம் என்று கூறியதாக பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்..

அட இதெல்லாம் சாத்தியமா இன்று நீங்கள் கேட்கலாம்.. அதற்கான உதாரணத்தை ராஜீவ்காந்தி ஏற்கனவே செய்து காட்டியிருக்கிறார்.அனைவரும் ஷாபானு வழக்கு என்று தேடி பாருங்கள்..ஒரு ஏழை இஸ்லாமிய பெண்ணுக்கு நீதிவழங்கிய சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை எப்படி ராஜீவ்காந்தி திருத்தி அமைத்தார் என்பதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.
அதுவும் குறிப்பாக இஸ்லாமிய சமுதாயத்தின் ஆண்கள் வாக்குகளை குறிவைத்து, எப்படி ஒருபெண்ணுக்கு அநீதி இழைக்க முற்பட்டார் ராஜீவ் காந்தி என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள் . ஏற்கனவே காங்கிரசின் ரத்தத்தில் ஊறிய ஒருசிந்தனையை தான் ராகுல் காந்தி வெளிப்படுத்தி இருப்பதாக இந்த குற்றச்சாட்டு அமைந்திருக்கிறது. அதனால் நிச்சயம் இதை சாதாரணமாக நாம் கடந்து செல்ல முடியாது..

அதே சமயம் இன்னொரு விஷயத்தையும் கூறுகிறார் ஆச்சாரியா பிரமோத்…
இப்படிப்பட்ட ஆலோசனைகள் அவருக்கு அமெரிக்காவிலிருந்து வருகிறது என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார் . அதாவது பரம்பரை சொத்துகளுக்கு அமெரிக்காவில் செய்வதுபோல வரி போட வேண்டும் என்று கூறிய சாம் பிட்ரோடா அவர்களை தான் மறைமுகமாக குறிப்பிடுகிறார் என்று புரிந்துகொள்ள முடிகிறது . ஒவ்வொரு புள்ளிகளையும் இணைத்து பார்க்க மிக பயங்கரமான முடிச்சுகள் அவிழ்கிறது.

ராமர் கோவில் திறப்பு விழாவை காங்கிரஸ்கட்சி புறக்கணித்தது நினைவிருக்கலாம். அதையும் ஆச்சாரியா பிரமாத் அவர்கள், கட்சியில் இருந்தபோதே கடுமையாக கண்டித்து இருந்தார்.

சிறுபான்மையினரின் வாக்குகளை பெறுவதற்காக அவர்களின் நம்பிக்கையை பெரும்அளவுக்கு உழைக்க வேண்டுமே தவிர….மற்ற மதங்களை புண்படுத்துவதன் மூலம் சிறுபான்மையினரின் வாக்குகளை பெற்றுவிடலாம் என்று காங்கிரஸ்கட்சி கணக்குப் போடுகிறது.. ஆனால் இதெல்லாம் பிளாக் அண்ட் ஒயிட் காலத்து டெக்னிக்காக மாறிவிட்டது..

காங்கிரஸின் இந்த கொடூர எண்ணத்துக்கு மக்கள் நிச்சயம் மிகப்பெரிய பாடம் புகட்டுவார்கள்..

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...