இந்தியாவில் குறைக்கடத்தி துறைக்கான எதிர்காலம் மிகப்பிரகாசமாகமாறிவருகிறது. திறமையான உள்ளூர் திறமைகள் மற்றும் மத்திய-மாநில அரசுகளின் உறுதுணையானகொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, உலகளாவிய குறைக்கடத்தி நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் கால்களைப்பதிப்பதில் தீவிர ஆர்வம்காட்டி வருகின்றன. இதற்குச் சான்றாக அண்மையில் நடைபெற்ற ‘செமிகான் இந்தியா 2026’ மாநாடு மிகப்பெரியஅளவில் வெற்றிகரமாக அமைந்தது.
ஏ.எஸ்.எம்.எல் (ASML) நிறுவனத்தின் வருகையும் டாடா எலக்ட்ரானிக்ஸும்
உலகளவில் குறைக்கடத்தி தயாரிக்கும் நாடுகளில் மட்டுமேதனது இருப்பைக்கொண்டுள்ள பிரபல லித்தோகிராஃபிக் உபகரண நிறுவனமான ‘ஏ.எஸ்.எம்.எல்’ (ASML), தற்போது இந்தியாவிலும் தனது அலுவலகத்தைஅதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் தங்களது வாடிக்கையாளர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என அதீத நம்பிக்கை தெரிவித்துள்ளது.
குறிப்பாக, இந்தியாவில் 300 மில்லிமீட்டர் செமிகண்டக்டர் ஃபேப் (Fab) ஆலையையும், மாதத்திற்கு 50,000 வேபர்கள் உற்பத்தி திறனையும் கொண்டுள்ள முதல் வாடிக்கையாளர் ‘டாடா எலக்ட்ரானிக்ஸ்’ நிறுவனம்தான் என்று ஏ.எஸ்.எம்.எல் நிறுவனத்தின் தலைமை மூலோபாய மூலவளம் மற்றும் கொள்முதல் அதிகாரி ஆலன் வெய்ன் பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “இதை நாம் மேலும் விரிவுபடுத்த பல ஃபேப் ஆலைகளை இங்கு உருவாக்கவேண்டும். பிரதமர் நரேந்திர மோடியும் அவரது குழுவினரும் உருவாக்கியுள்ள சுற்றுச்சூழல் கொள்கைகளும், இந்தியாவில் உள்ள அசாத்திய திறமைகளும் எங்கள் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளன” என்றார்.
தொழில் துறை நிபுணர்களின் கணிப்புப்படி, உலகில் தயாரிக்கப்படும் எந்தவொரு சிப்பும் (Chip) ஏ.எஸ்.எம்.எல் நிறுவனத்தின் உபகரணங்கள் இல்லாமல் உற்பத்தியாக முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
2032-க்குள் பல ஃபேப் ஆலைகள் உருவாகும்!
வாடிக்கையாளர்களை ஆதரிப்பதுடன், நாட்டின் திறமைகளைப்பயன்படுத்துவதே தங்கள் வருகையின் நோக்கம் என்று குறிப்பிட்ட ஆலன் வெய்ன், இந்தியாவின் எதிர்கால இலக்கைப் பற்றிப் பேசுகையில், “2032-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் உள்ளூர் குறைக்கடத்தி தேவையில் 15% முதல் 25% வரை வேப் ஃபேப் தயாரிக்கும் திறனைப் பெற வேண்டும் என்பதே இந்தியாவின் லட்சியம். இதன் மூலம் 2032-க்குள் இந்தியாவில் பல ஃபேப் ஆலைகள் இயங்கும்” என்று தெரிவித்தார்.
அரசின் மெகா திட்டங்களும் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளும்
இந்தியாவில் குறைக்கடத்தி கட்டமைப்பை மேம்படுத்த அரசாங்கம் ‘செமிகான் 2.0’ (Semicon 2.0) திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 1.27 லட்சம் கோடி ரூபாய் (13.5 பில்லியன் டாலர்) வரை ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது. இப்புதிய திட்டத்தின் கீழ் சுமார் 12 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய முதலீட்டுத்திட்டங்கள் வரக்கூடும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, கர்நாடக அரசுடன் ரூ. 3,600 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஒப்பந்தம் செய்த அடுத்த நாளே, முன்னணி குறைக்கடத்தி உபகரண தயாரிப்பு நிறுவனமான ‘அப்ளைடு மெட்டீரியல்ஸ்’ (Applied Materials) மாநாட்டில் பங்கேற்று, அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 48,000 கோடி) முதலீடு செய்வதாக உறுதியளித்துள்ளது.
இந்த அதியாவசியத் தொழில்நுட்ப முதலீடுகள் இந்தியாவின் பொருளாதார முகவரியை முற்றிலுமாக மாற்றி, இந்தியாவை உலகளாவிய சிப் உற்பத்தி மையமாக மாற்றும் என்பதில் ஐயமில்லை.