சிறுமதி படைத்த ப.சிதம்பரம் ஆர்.எஸ்.எஸ்,சை விமர்சிக்கலாமா .

 இளவரசர் ராகுல் காந்தியின் தவறான பேச்சால், கொள்கையால், செய்கையால், கடந்த 10 ஆண்டுகளில் நாடு நாசமானது. ஆனாலும்.. அந்த தொடரும் உளறல்களால், நாடு நன்மை அடையப்போகிறது இன்று. ஆம்.ராஜஸ்தானில் அவரது "ஐ.எஸ்.ஐ." உளறல்கள், அவரது, பாட்டி இந்திராகாந்தி, அப்பா ராஜீவ் போல நானும் கொல்லப்படுவேன் " என்ற ஒப்பாரிகள், இன்று மக்களிடையே அவரது "அசல் முகத்தை காட்டி". நரேந்திர மோடிக்கு மேலும் ஆதரவை கூட்டி வருகிறது..

அதே மாதிரி இன்று ராகுலின் ஒப்பாரி கூட்டத்தில் மேலும் ஒருவர் சேர்ந்திருக்கிறார்..அவர்தான் செட்டிநாட்டு மக்களின் பெயரை கெடுக்க வந்த ப.சிதம்பரம் அவர்கள்.

வல்லபாய் பட்டேலும் சரி, கபூர் கமிஷனும் சரி, பிற்காலத்தில் ஜவர்ஹர்லால் நேருவும் சரி,  காந்திகொலைக்கும் ஆர்.எஸ். எசுக்கும்,எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தீர்ப்பளித்த பின்பும், இந்தியாவின் சுப்ரீம் கோர்ட் இதை உறுதி செய்தபின்பும், "சிறுமதி " படைத்த ப.சிதம்பரம் மீண்டும் ஆர்.எஸ்.எஸ்,சை தொடர்பு படுத்தி பேசுவது, சட்டவிரோதம், மட்டுமல்ல..கோர்ட்டை அவமதித்ததும் ஆகும்…

எனவே அவர்மீது "கோர்ட் அவமதிப்பு வழக்கு மற்றும் மான நஷ்ட்ட வழக்கும் " தொடரவேண்டும்..

அவரது சிந்தனைகள் (அப்படி ஒன்று இருந்தால் ) செத்துப் போய் விட்டது. மண்டை கனத்துப் போய் விட்டத்து..மனம் மற(ந )த்துப் போய் விட்டது….அதனால் தான் திருச்சி பொது கூட்டத்தில் வல்லவன் வாஜ்பாயை அமரராக்கி  ஆனந்தம் கண்டிருக்கிறார்..

யார் இருக்கிறார்…இல்லை..என்பதைக்கூட நினைவில் வைக்க முடியாதவர் இந்தியாவின் "பொக்கிஷ" மந்திரி..நேற்று திருச்சியில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் "அமரரான வாஜ்பாயை பற்றி பேசுவது சரியாகாது" என "தவறாக " பேசியுள்ளார்..மேடையில் இருந்த நம் முன்னாள் சகா ..இந்நாள் காங்கிரஸ் ..திருநாவுக்கரசரும், சிதம்பரத்தின் மைந்தர் கார்த்தியும், தலையில் கைவைத்து கொண்டனராம்..நாட்டு மக்களும், ப.சிதம்பரத்தின் இந்த பயித்தியக்காரத்தனமான பேச்சால், தலையில் அடித்துக்கொண்டு சிரிக்கின்றனர்..

 நேற்று திருச்சி கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஐ வரிக்கு வரி திட்டி தீர்த்த இதே சிதம்பரம்தான், 2001 ஆம் ஆண்டு இரும்பு மனிதர் அத்வானியின் வீட்டுக்கு சென்று என்னை பாஜகவில் சேர்த்துக்கொள்ளுங்கள்..என மன்றாடியதும், இளகிப்போன அத்வானி அங்கிருந்து இதே திருச்சியில் இருந்த இல.கணேசனிடம் கருத்து கேட்டதும், தலைவனின் கருத்துக்கு முதன்முறையாக எதிர்கருத்து தெரிவித்து "இந்த புல்லுருவியை சேர்க்கவேண்டாம்" என தெரிவித்ததும், அப்படி விரட்டி விடப்பட்டவர்தான் இந்த ப.சிதம்பரம் என்பதையும் நாங்கள் மறக்கவில்லை.

இந்திய அரசியல் இப்போது ஒரு புதிய பரிணாமத்தில் செல்கிறது..கடந்த 10 ஆண்டுகளாக "நெகட்டிவ் பிரச்சாரத்தால்" கடுமையாக விமர்சிக்கப்பட்டு, மிகப்பெரும்புகழ் பெற்ற ஒரு "பாசிட்டிவ் மனிதர்" வளர்ச்சியின் நாயகன் நரேந்திர மோடி ..

அதேபோல் கடந்த 88 ஆண்டுகளாக "நெகட்டிவ் பிரச்சாரங்களை" கண்டு கவலைப்படாத.
மிகவேகமாக வளர்ந்து ..உயர்ந்த "பாசிட்டிவ்" இயக்கம் ஆர்.எஸ்.எஸ் மாளிகைகளை உருவாக்கும் மகாபாரத "மயன்" போல மனிதர்களை உருவாக்கி வருகிறது..

ஆக பதவியை விட்டு ஆட்சியை விட்டு நாட்டை விட்டு போகின்ற காலத்தில், காங்கிரசும்,  ராகுலும், சிதம்பரமும், தங்கள் தவாறன பேச்சினால், மோடியையும், ஆர். எஸ்,எஸ்.ஐயும் வளர்த்துவிட்டு செல்கின்றனர்..தவறிலும் ஒரு நல்லது செய்வதால், நரகத்தில் அவர்கள் கழிக்கும் காலத்தை குறைத்து விடுமாறு எல்லாம் வல்ல எமதர்ம ராஜனை பிராத்திக்கிறேன்

 

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...