பாடகி லதாமங்கேஷ்கரின் பாரதரத்னா விருதை பறிக்க அது ஒன்றும் உங்கள் தாத்தாவீட்டு சொத்து இல்லை என்று சிவசேனா மற்றும் பாஜக காங்கிரசை விமர்சித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தீனா நாத் மங்கேஷ்கர் மருத்துவமனை திறப்புவிழா இந்த மாததுவக்கத்தில் நடந்தது. இந்தவிழாவில் கலந்துகொண்ட பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் பா.ஜ.க பிரதமர்வேட்பாளர் நரேந்திரமோடிக்கு ஆதரவுதெரிவித்து பேசினார்.
மோடி பிரதமராக நான் கடவுளை பிரார்த்திக்கிறேன். இதுதான் அனைவரின் விருப்பமும்கூட என்றார். இதையடுத்து கடந்த திங்கட் கிழமை நடந்த விழா ஒன்றில் கலந்துகொண்ட மும்பை மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்எல்ஏ.வுமான ஜனார்தன் சந்துர்கர் அரசியல்வாதிகளுக்கு ஆதரவுதெரிவிக்கும் கலைஞர்களின் பத்மவிருதுகளை அவர்கள் திருப்பிக்கொடுக்க வேண்டும். இல்லை என்றால் அரசு அந்தவிருதுகளை பறிக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து சிவசேனா தலைவரும், எம்பி.யுமான சஞ்சய்ராவ்த் கூறுகையில், இந்தவிருதுகள் ஒன்றும் சந்துர்கரின் தாத்தாவீட்டு சொத்து இல்லை. ஒரு தனிநபரின் திறமையை பாராட்டி அரசு வழங்கியது. இசைத்துறையில் லதாஜியின் சாதனைகளை பார்த்து அரசு அவருக்கு பாரதரத்னா உள்ளிட்ட விருதுகளை வழங்கியுள்ளது. அரசு விருதுகொடுப்பதால் அதற்கு அடிமையாக முடியாது.
லதாஜி உள்பட விருதுபெற்ற அனைவருக்கும் தங்கள் கருத்துகளை தெரிவிக்கும் உரிமையுள்ளது. விருதுகளை திருப்பிக் கொடுக்கச்சொல்வது விந்தையானது. லதாஜியை பிடிக்கவில்லை என்றால் சந்துர்கர் அவரதுபாடல்களை கேட்பதை நிறுத்தவேண்டும் என்றார். சந்துர்கர் பேச்சுகுறித்து பா.ஜ.க மூத்த தலைவர் அதுல்ஷா கூறுகையில், லதாமங்கேஷ்கருக்கு அவரது கருத்தைதெரிவிக்கும் உரிமை உள்ளது. அவரை நச்சரிப்பது தவறு என்றார்.
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.