பாஜக., வின் மாபெரும் பொதுக்கூட்டம் ஏற்பாடுகள் தீவிரம்

 சென்னையை அடுத்த வண்டலூரில் இன்று நடைபெறும் பாஜக மாநாட்டில் பாஜக  பிரதமர்வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதற்காக அவர் தனிவிமானத்தில் சென்னை வருகிறார். மாநாட்டில் 10 லட்சம் தொண்டர்களை திரட்ட ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

சென்னையை அடுத்த வண்டலூர் வி.ஜி.பி மைதானத்தில், நாளை மாலை பாஜக மாநாடு நடக்கிறது. இதில், பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகிறார். பாஜ கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக, ஐஜேகே கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். மாநாட்டிற்காக 100 ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடுகள் தயாராகிவருகின்றன.

தலைவர்கள் அமரும் வகையில் 200 அடி அகலத்தில் நாடாளுமன்ற கட்டிடவடிவில் பிரமாண்டமாக மேடை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், முக்கியபிரமுகர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அமர தனித் தனி வரிசைகள் அமைக்கப்படுகிறது. அதேபோல், நரேந்திரமோடி மற்றும் முக்கிய தலைவர்கள் வருவதற்கு தனிவழியும், நிர்வாகிகள், தொண்டர்கள் வருவதற்காக தனிவழியும் அமைக்கப்படுகின்றன. மாநாட்டில் மொத்தம் 10 லட்சம்பேரை திரட்ட நிர்வாகிகள் ஏற்பாடுசெய்து வருகின்றனர். 40 ஆயிரம் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்றார்போல் பார்க்கிங் இட வசதி ஏற்படுத்தப்படுகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்க அசாம்மாநிலம் கவுகாத்தியில் இருந்து 8ம் தேதி பிற்பகலில் தனிவிமானம் மூலம் நரேந்திரமோடி புறப்படுகிறார். மாலை 6 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்துக்கு அவர் வந்து சேருவார். அங்கு அவருக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர், மாலை 6.20 மணிக்கு கார்மூலம், பாஜ மாநாடு நடக்கும் வண்டலூர் புறப்பட்டு செல்கிறார். 6.45 மணிக்கு மாநாடு மேடைக்குவருகிறார்.நரேந்திர மோடி வருகையையொட்டி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிரபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், சென்னை பழையவிமான நிலையம் தமிழக போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

24 மணிநேரமும் கண்காணிப்பில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பழைய விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்குள்ள 5வது கேட்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மோடிபயணம் செய்யும் விமானம், அவை நிறுத்தப்படும் இடம் ஆகிய பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...