தமிழகத்தில் மாற்றத்துக்கான புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டது

 தமிழகத்தில் மாற்றத்துக்கான புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டது என பா.ஜ.க மாநில துணைத்தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது ; கடந்த 1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் இப்போது தான் மக்களவைத் தேர்தலுக்கு மகத்தானகூட்டணி அமைந்துள்ளது. நாடுமுழுவதும் இப்போது மோடி அலை வீசுகிறது. பா.ஜ.க.,வின் சின்னமான தாமரையை மக்களிடம் கொண்டுசென்று சேர்த்தால் வெற்றி என்ற நிலை இருக்கிறது.கடந்த 2009-இல் இப்போது பா.ஜ.க கூட்டணியில் உள்ள கட்சிகள் பெற்றவாக்குகளை சேர்த்தால் 25 சதவீதம், மோடி அலைக்காக 15 சதவீதம் ஆக மொத்தம் 40 சதவீத வாக்குகள்கிடைப்பது உறுதி. தமிழகத்தில் பாஜக கூட்டணி அமோக வெற்றிபெறும்.

தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்று எனும் நிலையை பா.ஜ.க கூட்டணி உருவாக்கியுள்ளது. பாஜக மத்தியில் ஆண்ட 6 ஆண்டுகளில் 6.80 கோடிபேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் மட்டும் உருவாக்கப்பட்டுள்ளன. செயல்படாத பிரதமர் ஒருவர் 10 ஆண்டுகளாக அப்பதவியில் தொடர்கிறார். குஜராத்தை பொறுத்த வரையில் தினமும் மாலை 4 மணிக்குள் பெறப்படும் ஜாதி, வருமான சான்றிதழ்களின் விண்ணப்பங்கள்மீது அன்றே நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை நாடுமுழுவதும் செயல்படுத்த வேண்டும்.

விவசாய மின் இணைப்புக்கு தமிழகத்தில் காத்திருக்கவேண்டும். ஆனால் குஜராத்தில் 24 மணி நேரத்துக்குள் மின் இணைப்பு கொடுக்கப்படுகிறது என்றார் எச்.ராஜா.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களி ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களின் சக்தி மண்டோலியா பெருமிதம் கடந்த 7 ஆண்டுகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை இருமடங்கு ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அர ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை, புரோக்கர்களும், வாரிசுகளும் ஆட்டிப்படைத்தனர் -அமித் ஷா 'காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை,புரோக்கர்களும்,வாரிசுகளும் தான் ஆட்டிப்படைத்தனர்,' என ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த்தம் மாறிவிட்டது நிதின் கட்கரி கருத்து  ''ஒரு காலத்தில் அரசியல் என்றால், மக்கள் சேவை, நாட்டை ...

தாயின் பெயரில் ஒரு மரக்கன்று தி ...

தாயின் பெயரில் ஒரு மரக்கன்று திட்டம் நாடு தழுவிய வெற்றி உலக சுற்றுச்சூழல் தினத்தன்று, புதுதில்லியில் உள்ள புத்த ஜெயந்தி ...

மேக் இன் இந்தியா திட்டத்தின் 10 ...

மேக் இன்  இந்தியா திட்டத்தின் 10 ஆண்டுகள் 'மேக் இன் இந்தியா' முன்முயற்சி மின்னணுத் துறையின் வளர்ச்சிக்கு ...

ரூ 130 கோடி மதிப்பிலான 3 பரம் ருத்ர ...

ரூ 130 கோடி மதிப்பிலான 3 பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார் சுமார் ரூ.130 கோடி மதிப்பிலான மூன்று பரம் ருத்ரா ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...