இந்நிலை தொடர்ந்தால், தக்க பதிலடி கொடுக்க மத்திய அரசு தயங்காது

 மீன்பிடி தடைக் காலம் முடிந்து, மீன் பிடிக்கச்சென்ற தமிழக மீனவர்களைக் கைதுசெய்த இலங்கை அரசைக் கண்டித்த பாஜக மாநில துணைத் தலைவர் எச்.ராஜா, இந்நிலை தொடர்ந்தால் தக்கபதிலடி கொடுக்க மத்திய அரசு தயங்காது என எச்சரித்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் இதுகுறித்து மேலும் கூறியதாவது அமைச்சரவை குழுக்களை பிரதமர் கலைத்திருப்பதன் மூலம், அந்தந்த துறையைச்சேர்ந்த அனைத்து விஷயங்களுக்கும் அமைச்சர்களே பொறுப்பேற்கும் நிலை உருவாகியுள்ளது.

காஷ்மீர் மக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்தி, 370வது சட்டப் பிரிவை மத்திய அரசு ரத்துசெய்யும். ஏற்கெனவே மத்தியில் ஆட்சிசெய்த காங்கிரஸ் அரசின் தவறானக் கொள்கையால்தான் தற்போது டீசல் விலை உயர்ந்துள்ளது. இது தற்காலிகமானது தான். விரைவில் பிரதமரால் இதற்காக ஒருகொள்கை வகுக்கப்பட்டு, விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பாஜக அரசு, எந்த பிரச்சினையையுமே சுமுகமாகப் பேசித்தீர்க்கும். இந்த அடிப்படையில் தான் மத்திய அரசின் பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் அழைக்கப்பட்டார். தற்போது, மீன்பிடித் தடைக் காலம் முடிந்த நிலையில், மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ள சம்பவம் கண்டனத்துக்குரியது. இந்த நிலை தொடர்ந்தால், தக்க பதிலடி கொடுக்க மத்திய அரசு தயங்காது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களி ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களின் சக்தி மண்டோலியா பெருமிதம் கடந்த 7 ஆண்டுகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை இருமடங்கு ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அர ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை, புரோக்கர்களும், வாரிசுகளும் ஆட்டிப்படைத்தனர் -அமித் ஷா 'காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை,புரோக்கர்களும்,வாரிசுகளும் தான் ஆட்டிப்படைத்தனர்,' என ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த்தம் மாறிவிட்டது நிதின் கட்கரி கருத்து  ''ஒரு காலத்தில் அரசியல் என்றால், மக்கள் சேவை, நாட்டை ...

தாயின் பெயரில் ஒரு மரக்கன்று தி ...

தாயின் பெயரில் ஒரு மரக்கன்று திட்டம் நாடு தழுவிய வெற்றி உலக சுற்றுச்சூழல் தினத்தன்று, புதுதில்லியில் உள்ள புத்த ஜெயந்தி ...

மேக் இன் இந்தியா திட்டத்தின் 10 ...

மேக் இன்  இந்தியா திட்டத்தின் 10 ஆண்டுகள் 'மேக் இன் இந்தியா' முன்முயற்சி மின்னணுத் துறையின் வளர்ச்சிக்கு ...

ரூ 130 கோடி மதிப்பிலான 3 பரம் ருத்ர ...

ரூ 130 கோடி மதிப்பிலான 3 பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார் சுமார் ரூ.130 கோடி மதிப்பிலான மூன்று பரம் ருத்ரா ...

மருத்துவ செய்திகள்

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...