குஷ்பு எந்த காலத்திலும் காந்தியாகவோ, காமராஜராகவோ முடியாது என்று மத்திய கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ‘முதல் முறையாக நமது நாட்டை சேர்ந்த புலவருடைய பிறந்தநாளை நாடுமுழுவதும் உள்ள எல்லா நிலைகளிலும் கொண்டாடப்படும் என்று மனித மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி அறிவித்தார். இது பெருமைகளிலே மிகப் பெரிய பெருமையாகும்.
தமிழை வடமாநிலத்திலும் பள்ளிக் கூடத்தில் பாட மொழியாக கொண்டு வர வேண்டும் என்று ஸ்மிருதி இராணியிடம் நான் பலமுறை கோரிக்கை வைத்துள்ளேன். தற்போது திருவள்ளுவரின் திருக்குறள் பாராளுமன்ற அவையில் அறிவித்தது மகிழ்ச்சி தருகிறது. ஸ்மிருதி இராணியை பார்த்து வாழ்த்துதெரிவித்த போது மற்றொரு கோரிக்கையும் வைத்தேன். அதாவது கவிஞர் பாரதியின் பாடல்களை தேசியளவில் எல்லா பள்ளிகளிலும் கொண்டு வர வேண்டும் என்றேன்.
தமிழின் பெருமையை சொல்லி ஆட்சிக்குவந்து தமிழர்களின் தமிழ் உணர்வை தூண்டிவிட்டு வடக்கு, தெற்கு மொழி வேறுபாடுகள் என்றெல்லாம் வித்தியாசம்பாடி வந்த தமிழக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மோடி அரசு செயல்பட தொடங்கி யுள்ளது. இந்த நாட்டில் அனைத்து மொழிமக்களும் மதிக்கப்படுவார்கள் என்பதற்கு திருக்குறள் தேசிய அளவில் கொண்டாட இருப்பதே ஒரு எடுத்துக் காட்டாகும்.
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.