புது டெல்லியில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பிற்கும் உபசரிப்புக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக அமெரிக்க அதிபர் ஒபாமா உற்சாகத்தோடு தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று காலை புது டெல்லி விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவரை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த பிரதமர் மோடியை பார்த்து கையசைத்து மகிழ்ச்சியை தெரிவித்தார். பின்னர் பிரதமர் மோடியை அதிபர் ஒபாமா ஆரத்தழுவிக் கொண்டார்.

அதனை தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகையில் முப்படை வீரர்கள் அணிவகுக்க பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. குதிரைப்படை வீரர்கள் அணிவகுத்து அதிபர் ஒபாமா அழைத்து வரப்பட்டார்.

மதியம் 11.55 மணிக்கு ஒபாமா ஜனாதிபதி மாளிகைக்கு வந்தார். அவரை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ், ஆகியோர் வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

மகாத்மா காந்தி சமாதியில் ஒபாமா ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்.ஒபாமா வருகையால் மகாத்மா காந்தி நினைவுடத்தில் மலர் வளையங்களால் அலங்கரிக்கபட்டு இருந்தது. மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஒபாமா அரச மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தார்.

ராஷ்டிரபவனில் காந்திருந்த செய்தியாளர்களைப் பார்த்து ஒபாமா கூறியதாவது:

எனக்கு அளிக்கப்பட்ட மகத்தான வரவேற்பிற்கும், கவனிப்பிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.மிகவும் உணர்ச்சிமயமான நிலையில் காணப்பட்ட ஒபாமா, செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

Leave a Reply