முதலமைச்சர் ஷPலாதீட்சித்தை வெங்காயம் வெளியேற்றிவிடும் என்றும் அது தெய்வ நீதி என்றும் சுஷ்மாஸ்வராஜ் தெரிவித்தார்.

டெல்லி பா.ஜ.க முதல்வர்வேட்பாளர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இரண்டுசொட்டுகளின் கதை என்ற தலைப்பில் போலியோ ஒழிப்புஇயக்கம் குறித்து புத்தகம் எழுதியுள்ளார். அப்புத்தகத்தின் வெளியீட்டுவிழா டெல்லியில் நடைபெற்றது. புத்தகத்தைவெளியிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மாஸ்வராஜ் கூறும்போது

தான் டெல்லி முதலமைச்சராக இருந்தபோது வெங்காய விலை உயர்வு பிரச்னையை காங்கிரஸ் கட்சி பெரியபிரச்னையாக மாற்றியது. அப்போது ஷீலாதீட்சித் வெங்காய மாலை அணிந்து எதிர்ப்புதெரிவித்தார். இப்போது அதேவெங்காயம் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு காரணமாகி கொண்டிருக்கிறது இதுதான் தெய்வநீதி என்று தெரிவித்தார்.

மேலும் உபி மாநிலம், முஸாபர்நகர் கலவரம் குறித்து ராகுல் காந்தி ஒரு கருத்துத் தெரிவித்துள்ளார். அக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை பாகிஸ்தான் உளவுத்துறை அணுகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.ஆனால் ராகுல்காந்தியும், காங்கிரஸ்காரர்களும் முதலில் சீக்கியர்களுக்கு எதிராக டெல்லியில் 1984- ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தைப்பற்றிப் பேச வேண்டும். பா.ஜ.க ஒரு வகுப்புவாதக் கட்சி என்று சொல்வதால் காங்கிரஸ் வெற்றிபெற்றுவிடும் என அவர்கள் நினைக்கின்றனர் என்று சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

Leave a Reply