மாணவர்கள் பெரிதாக கனவு காண-வேண்டும். மேலும் கனவை நனவாக்க மிக கடுமையாக உழைக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குஜராத் மாநிலம் ஹத்ராசில் நடந்த பள்ளி விழாவில் மாணவர்களிடையே பேசிய அவர், மாணவர்களின் கனவு மிக பெரியதாக இருக்க வேண்டும். மேலும் அவற்றை நனவாக்க மிகவும் கடுமையாக உழைக்க வேண்டும். இதற்காக என்னால் முடியும். நம்மால் முடியும். இந்தியாவால் முடியும் என்கிற மந்திரத்தை சொல்லி கொண்டே இருக்க வேண்டும் என தெரிவித்தார்.