பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசே தமிழகத்தில் அதிகமான நலத் திட்டங்களை செய்துள்ளது.

“என் வாக்குச்சாவடி, வலுவான வாக்குச்சாவடி” என்ற தலைப்பில் தமிழகத்தில் கோவை, நாமக்கல், கன்னியாகுமரி, சேலம், நீலகிரி ஆகிய மாவட்டங்களின் பாரதிய ஜனதா பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது.,

கடந்த காங்கிரஸ் ஆட்சியைவிட தற்போதைய ஆட்சியில் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக கிராமப்புறங்களில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் 3 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அதிகமாக சாலை அமைக்கப்பட்டுள்ளது.. 4 லட்சம் இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது, ‘தமிழகத்தில் 12,000 கிராமங்களுக்கு கழிப்பறை கட்டி தரப்பட்டுள்ளது.தமிழகத்தில் உஜ்வாலா திட்டத்தின் மூலம் புகையில்லாத வீடுகள் திட்டத்தில் 27 லட்சம் வீடுகளுக்கு சமையல் எரி வாயு இணைப்பு தரப்பட்டுள்ளது.  பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் மூலம் 4.30 லட்சம் வீடுகள் கட்டிதரப் பட்டுள்ளன’.  விவசாயிகளின்  நலனை கருத்தில்  கொண்டு இதுவரை மத்திய அரசின் சார்பில் 2.11 லட்சம் கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது

மத்திய அரசின் ஆயுஷ்மான் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 3 மாதங்களில் 5 லட்சம் பேர் சிகிச்சை பெற்று பலன் அடைந்துள்ளனர்

முத்ரா திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கானோருக்கு கடன் அளிக்கப்படுள்ளது.காங்கிரசை பொறுத்தவரை, நாட்டின்பாதுகாப்பு மற்றும் ராணுவத்துறையை, கொள்ளையடிக்கும், சம்பாதிக்கும் ஒரு வழியாகவே பயன்படுத்தி வந்துள்ளது.கடந்த, 1940 மற்றும் 1950களில், ஜீப் ஊழல்; 1980களில், போபர்ஸ் பீரங்கி ஊழல்; சமீபத்தில், ஹெலிகாப்டர் வாங்குவது, நீர்மூழ்கி கப்பல்வாங்குவதில் ஊழல் என, தொடர்ந்து, ராணுவத்துறையில், அந்தக் கட்சி ஊழல் செய்து வந்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது, நம் ராணுவம், ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ எனப்படும் துல்லியதாக்குதல் நடத்தியது. இதற்காக மகிழ்ச்சி, பெருமை அடையவேண்டும். ஆனால், காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. நாட்டின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், ராணுவத்தினர் மன உறுதி குலைந்தாலும், அதற்காக காங்கிரஸ் கவலைப் பட்டதில்லை. அந்தத் துறைகளில் எப்படியெல்லாம் பணம் சம்பாதிப்பது, ஊழல்செய்வது என்பதிலேயே அக்கறையுடன் இருந்தது. ஆனால் நாம், ராணுவ வீரர்களை பெருமை கொள்ள செய்துள்ளோம். அவர்களுக்கு தேவையான கருவிகளை வாங்கித் தருகிறோம்.

 

விவசாயிகள் யூரியா உரத்திற்காக போராடிய, காவல்துறையிடம் தடியடி வாங்கிய காலம் போய்விட்டது. இன்று யூரியா உரம் எந்த தட்டுப்பாடும் இன்றி கிடைக்கிறது வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு பகுதிகள் வளர்ச்சி பெற்றால், தேசம் வளர்ச்சி பெறும். நடுத்தர வர்க்கத்தினரை பெரிதும் பாதித்த பண வீக்கம் கட்டுக்குள் உள்ளது. முந்தைய ஆட்சியில் பணவீக்கம் அதிகமாக இருந்தது. முந்தைய ஆட்சியை ஒப்பிடும் போது, தற்போது, கட்டுக்குள் உள்ளது.

பல்வேறு திட்டங்களை பட்டியிலிட்ட மோடி, மத்திய அரசின் திட்டங்கள் எந்தளவிற்கு தெரியும் என நிர்வாகிகளிடம் கேட்டார்.

விவசாயிகளுக்கு மத்திய அரசு செயல்படுத்திய திட்டங்களையும் கேட்டறிந்தார். மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு விரிவாக எடுத்துரைக்க வேண்டும் எனவும் பாஜக நிர்வாகிகளுக்கு பிரதமர் அறிவுரை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.