வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க வுடன் கூட்டணி வைத்து கொள்வது என்று முடிவு செய்துள்ள தேமுதிக, பிப்ரவரி 24ஆம் தேதி அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் முதல்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது .

இந்த பேச்சுவார்த்தையின் பொழுது அ.தி.மு.க தரப்பில் ஓ.பன்னீர்செல்வம், பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும்

செங்கோட்டையன் பங்கேற்றனர். தேமுதிக தரப்பில் பண்ருட்டி ராமச்சந்திரன், சுதீஷ் மற்றும் சுந்தரராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்,

அதிமுகவுடன் தேமுதிக கட்சி கூட்டணி வைக்க வேண்டும் என மக்கள் விரும்பினர் . முதல்கட்ட-பேச்சுவார்த்தை சுமூகமாக முடி வடைந்தது . பேச்சுவார்த்தை குறித்த முழு விபரங்கள் கட்சி தலைவரிடம் தெரிவிக்கப்படும் என்றார் .

Leave a Reply