இந்திய நாடாளுமன்றம்  தாக்குதலின் 9வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது,
க்டந்த 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி இந்திய நாடாளுமன்றம் பயங்கரவாதிகளால்  தாக்கப்பட்டது, இதில் பாதுகாப்பு படையினர் தங்கள் உயிரை பணயம் வைத்து இந்திய நாடாளுமன்றத்தை பாதுகாத்தனர்,  7 காவலர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர்,

இந்த சம்பவத்துக்கு சதித்திட்டம் தீட்டியதாக அப்சல் குரு என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டார்  டெல்லி உயர் நீதிமன்றம், கடந்த 2002 டிசம்பர் 18ஆம் தேதி அவருக்கு தூக்கு தண்டனையை  விதித்து . உச்சநீதிமன்றமும் 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி அப்சலின் தூக்குத்  தண்டனையை உறுதிசெய்தது. தீர்ப்பின் படி கடந்த  2006, அக்டோபர் 20 ஆம் தேதி தூக்கிலிடப்பட வேண்டும் என தேதி நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் அவர் தாக்கல் செய்த கருணை மனுவின்  காரணமாக, தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. அவரது கருணை மனுவை பரிசிலனை செய்த உள்துறை அமைச்சகம் அப்சல்குருவின் தூக்குதண்டனையை உறுதி செய்து குடியரசு தலைவருகு கடிதம் அனுப்பியதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இன்னமும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை இன்நிலையில்பா.ஜ, க   மூத்த தலைவர்  அத்வானி, அப்சல் குருவை தூக்கில் போடாமல் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். தீவிரவாதத்திற்கு எதிராக கடும்நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்தியஅரசு தரப்பில் கூறுகிறார்கள். ஆனால் அப்சல் குருவை இன்னும் தூக்கில் போடாமல் சிறையில் வைத்து அழகு பார்க்கிறார்கள்” என கடுமையாக சாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *