அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு மருந்திடுதல் எனும் ஒரு பலக்கம் தமிழ் மக்களை ஆட்டி வந்திருக்கிறது; கணவனின் அன்பு தொடர மனைவியும், மனைவியின் அன்பு தொடர கணவனும்,விலை மாதர்கள் தங்களுக்கு தொடர்ந்து வாடிக்கையாளர் கிடைக்கவும் இந்த மருந்திடுதலை பயன் படுத்தினர். உள்ளுக்குல் ஒரு சில கூட்டு மருந்துகளை சேர்த்து கொடுத்து விட்டால் அதை அருந்தியவர் கொடுத்தவரிடம் தொடர்ந்து அன்புடன் இருப்பார் என்பது ஒரு நம்பிக்கை .அத்தகைய மருந்திடுதல் எனும் தோஷத்தை நீக்கும் சத்தி அகத்திக்கு உண்டு .

 

அகத்திக் கீரையை உண்டால் உணவு எளிதில் ஜீரணமாகும். பித்த தொடர்பான நோய்கள் நீங்குகும், வாரத்துக்கு ஒரு முறையேனும் தவறாமல் அகத்தி கீரையை சமைத்து சாப்பிடடால் தேகத்தில் உஷ்ணம் தணியும் கண்கள் குளிர்ச்சி பெறும். குடல் புண் ஆறும் சிறு நீர் மற்றும் மலம் தாரளமாக கழியும். பித்து எனும் மனக் கோளாறும் நீங்கும்,

அகத்தி கீரை வயிற்றுப் புண் (அல்சர்) என்னும் நோயைக் குணப்படுத்தும் . இதற்கு அகத்திக்கீரையை நன்றாக சுத்தம் செய்து நான்குபங்கு சின்ன வெங்காயம் சேர்த்து அகத்திக்கீரை சூப் தயாரித்து தினசரி ஒரு வேளை குடிக்கலாம்.== அகத்தி கீரையையும் மருதாணி இலையையும் சம அளவில் எடுத்து நன்கு அரைத்து கால் வெடிப்புகளில் பற்றுப்போட்டால் வெடிப்புகள் மறையும்.

 

இதில் ஏ,சி என்னும் வைட்டமின்கள் உண்டு. கண் குளிரும். சூட்டைத் தணிக்கும். பித்தத்தைத் தணிக்கச் செய்யும். கார்த்திகை மாதத்தில் இதைச் சாப்பிட்டால் கொழுப்பு உண்டாகும் என்பர். நமது நாட்டில், சாவு நேர்ந்த வீடுகளில் அடுத்தநாள் அகத்திக் கீரை சாம்பார் செய்வது வழக்கம். இதன் காரணம் என்னவென்றால், சாவு நேர்ந்த வீட்டில் உள்ளவர்கள் பிணம் அடக்கம் செய்யப்படுகிற வரையில், சாப்பிடாமல் பட்டினி கிடப்பர்.

ஒருநாள் முழுவதும் பட்டினி கிடக்க நேரிடும். இதனால் உடம்பு சூடுகொள்ளும். அன்றியும் இறந்தவரைப் பற்றிய வருத்தத்தினால் இரத்தக் கொதிப்பும் ஏற்படும். இவ்விதம் நேரிட்ட சூட்டையும், இரத்தக் கொதிப்பையும் ஆற்றுவதற்காகத்தான் அகத்திக்கீரையை அடுத்தநாள் சமைத்து உண்ணும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

வைகுண்ட ஏகாதசியில் பலர் இரவு முழுவதும் கண் விழிப்பார்கள். இரவில் தூங்காமல் கண் விழிப்பதனால் உடம்பு சூடு அடையும். அச்சூட்டைத் தணிப்பதற்காக அகத்திக்கீரைக் குழம்பை அடுத்தநாள் சாப்பிடுவார்கள். இதனால் தேகச்சூட்டையும், இரத்தக் கொதிப்பையும் ஆற்றுகிற இயல்பு அகத்திக்கீரைக்கு உண்டு என்பது தெரிகிறது.

நாட்டு மருந்து சாப்பிடும்போது அகத்திக்கீரை சாப்பிடக் கூடாது. ஏனென்றால் மருந்தின் குணத்தை இக்கீரை முறித்துவிடும். அதனால் மருந்து சாப்பிடும் பயன் இல்லாமல் போகும்.

அகத்தி கீரை சாற்றை சேற்று புண்களில் தடவி வர சேற்று புண்கள் விரைவில் ஆறிவிடும். உடம்பில் காண படும் தேமலுக்கு அகத்தி கீரையீன் இலையை தேங்கா எண்ணெய்யில் வதக்கி, அதை விழுதாக அரைத்து பூசி வந்தால் தேமல் முற்றிலுமாக மறையும்.

 

அகத்தி கீரையை சாம்பாரில் இட்டும், துவட்டல் கறியாக சமைத்தும் சாப்பிடலாம்

அகத்தி கீரையை ஏகாதசி அன்று விரதமிருந்த பிறகு துவாதசியன்று உணவில் அகத்தி கீரைஉடன் நெல்லிக்காயையும் சேர்த்துக் கொள்வது சிறப்பு, எதையும் அர்த்ததுடன் தான் நம் முன்னோர்கள் வகை படுத்தியுள்ளனர். நாம் அதை மதித்து நடக்க வேண்டும்,

அகத்தி கீரைக்கு எல்லா மருந்துகளின் வீரியத்தையும் முறிக்கும் சக்தி உண்டு .எனவே சித்த மருந்துகள் சாப்பிடும்போது இதைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும்.

வாரம் ஒரு முறை மட்டுமே அகத்தியை உபயோகிக்க வேண்டும் .அதிகம் உபயோகித்தால் சொறி சிரங்கு வரும் .

அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்தியே’ என்று ஒரு பழமொழி அகத்தியைப் பற்றிக் கூறப்படுகிறது.

”மருந்திடுதல் போகுங்காண் வங்கிரந்தி வாய்வாம்

திருந்த அசனம் செரிக்கும்- வருந்தச்

சகத்திலெழு பித்தமது சாந்தியாம்

நாளும் அகத்தியிலை தின்னு மவர்க்கு."

அகத்தியை போற்றும் பாடல்

 

அகத்தியை அகத்தீஸ் வரனாகவே காணுங்கள். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அகத்தீஸ்வரம் எனும் ஊரில் அருள்பாலித்து கொண்டிருக்கும் அகத்தீஸ்வரன் மற்றும் அமுதவல்லித் தாயாரை ஒரு முறை தரிசித்து வாருங்கள்.

அகத்தியமுனிவர் தன் மனைவியுடன் ( லோகமுத்திரை) இந்த ஆலயத்துகு வந்து எம்பெருமானை தரிசித்து பாக்கியம் பெற்றார் .

Tags; அகத்தி கீரையீன் இலை,அகத்தி கீரையீன் நன்மை,அகத்தி கீரையீன் பயன்,அகத்தி கீரையை ஏகாதசி,அகத்திக் கீரை,அகத்திக் கீரையை உண்டால்,அகத்திய முனிவர்,அகத்தியமுனிவர்,அகத்தியை போற்றும் பாடல்,கண்கள் குளிர்ச்சி,குடல் புண்,பித்த,லோக முத்திரை,லோகமுத்திரை

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.