அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே; யேசுதாஸ் பாடிய பக்தி பாடல்


அலை பாயுதே கண்ணா|
என் மனம் மிக அலை பாயுதே/
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்/
அலை பாயுதே கண்ணா/
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்/
அலை பாயுதே கண்ணா/

நிலை பெயராது-சிலை போலவே நின்று/
நிலை பெயராது-சிலை போலவே நின்று/
நேரமாவதறியாமலே/
மிக விநோதமான முரளிதரா/
என் மனம் அலை பாயுதே
கண்ணா….

தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே
திக்கு நோக்கி என்னிரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே!

தனித்த மனத்தில் உருக்கி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்த வா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா!
கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழல் எனக்களித்தவா!
கதறி மனமுருகி நான் அழைக்கவா
இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ? இது முறையோ?
இது தருமம் தானோ?

குழல் ஊதிடும் பொழுது ஆடிடிடும்
குழைகள் போலவே
மனது வேதனை மிகவோடு

அலை பாயுதே கண்ணா
என் மனம் மிக அலை பாயுதே
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *