காஞ்சி சங்கராச் சாரியார் ஜெயேந்திரர் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியான நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற ஜெயேந்திரரின் 84வது ஜெயந்தி நிறைவுவிழா நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ‘' காஞ்சி மடம், 2,500 ஆண்டுகள் பாரம்பரியம்மிக்கது. குஜராத்தில் இருசமூகத்திற்கு இடையே பிரச்சினை ஏற்பட்டபோது, ஜெயந்திரர் வந்து சமரசம் செய்து வைத்ததார்.

காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரரின் பாதங்கள், குஜராத்தில் படாத இடமே இல்லை என்னும் வகையில், மாநிலம் முழுவதும் மக்களுக்கு ஆசிவழங்கியுள்ளார். இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் வழிகாட்டு மையமாக காஞ்சிமடம் இருக்கிறது .

பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்த போது, ஜெயேந்திரருக்கு, அரசு மரியாதை அளித்து பெருமைப் படுத்தினோம். 2,500 ஆண்டுகளுக்கு முன் ஆதி சங்கரர் தேசம் முழுவதும் தர்ம பிரசாரம் மேற்கொண்டார். அவற்றை மக்களுக்கு எடுத்து செல்லவே, 5 மடங்கள் நிறுவப்பட்டன. அவற்றுள் காஞ்சிமடம் மிக முக்கியமானது. இப்போதும் பல சமூக சேவைகளில் ஈடுபட்டு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது.

Leave a Reply