நாம் ஒவ்வொரு நாளையும் எப்படி மகிழ்ச்சியாக, இனிமையாக வாழ வேண்டும் என்கிற கலையை கற்ப்பிக்கும் , உலகம் எங்கும் வியாபித்து பல கோடி பண்பாட்டார்களை எல்லைகள் கடந்து உருவாக்கி வரும்! ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் வாழும் கலை அமைப்பின் "உலக கலாச்சார விழாவில்" அரசியல் புகுந்து சர்ச்சையையும், அந்நிகழ்ச்சிக்கு களங்கத்தையும் ஏற்ப்படுத்திய செயல் அநாகரிகமான ஒன்றாகும்.

வாழும் கலை அமைப்பு தொடங்கப்பட்டு 35ம் ஆண்டை முன்னிட்டு  யமுனை நதிக்கரையில் 11–ந் தேதி முதல் 13–ந் தேதிவரை, ‘உலக கலாசார திருவிழா’ நடைபெற்றது. கலாச்சாரங்கள் நதிப் படுகைகளில் இருந்தே உருவாகுகின்றன எனவே யமுனை நதிப்படுகை தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கலாம்.

இந்நிகழ்ச்சியில் உலகம் எங்கும் இருந்து .30 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கு கொள்ளலாம் என்று எதிர் பார்க்கப்பட்டதால் 1000-ம் ஏக்கர் நிலம் தேர்ந்தெடுக்கப் பட்டது. இந்திய பிரதமர், ஜனாதிபதி, முக்கிய அமைச்சர்கள், வெளிநாடுகளில் இருந்து முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்பதால், கூட்டநெரிசலை தவிர்க்கவும் பாதுகாப்பை பலப்படுத்தவும் இரண்டு தற்க்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டன. இதில் ஒன்றை இந்திய ராணுவமும், மற்றொன்றை பொதுப்பணித்துறையும் அமைத்தன.

 

இங்கிருந்தே பிரச்சனைகளும் வெடித்தன, “தனியார் நடத்தும் நிகழ்ச்சிக்கு எப்படி ராணுவத்தை பயன்படுத்தலாம்?” மார்க்சிஸ்டு தலைவர் சீதாராம் யெச்சூரி.

‘‘இந்த விழாவை யமுனை நதி கரையோரம் நடத்துவது சுற்றுச் சூழலை சேதப்படுத்தும்” ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ்.

‘‘இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்காக யமுனா நதியை விலை கொடுத்து விடக்கூடாது’’ காங்கிரஸ் கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத்.

என்று ஆளாளுக்கு அறிக்கைவிட்டு நமது கலாச்சாரத்துக்கு, பண்பாட்டுக்கு நம் தேசத்துக்கு பெருமை சேர்க்கும் ஒரு நிகழ்ச்சியை சர்ச்சைகள் நிறைந்ததாக்கி விட்டனர்.

எதிர்பார்த்ததை போன்றே திடீர் என ஒரு அமைப்பு பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து ரூ.5 கோடி அபராதத்தை செலுத்த வேண்டும் என்ற உத்தரவையும் பெற்றுள்ளது.

இத்தனைக்கும் அங்கு சிமிண்டால் ஆன எந்த காங்கிரிட் கட்டுமானமும் நடைபெற வில்லை. மூங்கில், மரம், மண் என சுற்றுச் சூழலை சேதப்படுத்தாத  தற்காலிக கட்டுமானங்களே அமைக்கப்பட்டன எனவே இது குறித்து சரத் யாதவ் கவலைப் பட்டிருக்க வேண்டியதில்லை.

தில்லி நகருக்குள்ளிருந்து புறப்படும் 18 வாய்க்கால்கள் மூலம் வெளியேறும் கழிவுநீர் யமுனையில் கலப்பதால். டில்லியில் நுழைந்தவுடனே  நீரின் மாசு 13 மடங்கு அதிகமாகி விடுகிறது. நீரில் 7.5 என இருக்கும் ஆக்சிசன் அளவு 1.5 ஆக குறைந்து விடுகிறது இதுதான் யமுனையின் இன்றைய நிலை. ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சியில் இதற்கு விலை கொடுத்து விட்டார்கள் எனவே இது குறித்து குலாம்நபி ஆசாத்தும்  கவலைப் பட்டிருக்க வேண்டியதில்லை

இதன் மதிப்பை அறிந்ததால் தான்  நீரை சுத்திகரிப்பதற்காக, ஒரு லட்சம் வீடுகளில் இருந்து இயற்க்கை நொதிப்பான்ங்களை தயார் செய்து பயன்படுத்தியுள்ளனர்.. இதன் பலனாக பல்லுயிர்ச் சூழல் பூங்காவாக இந்த இடம் மாறும் . 2010-ம் ஆண்டு முதல்  “வாழும் கலை” தன்னார்வலர்கள் இந்த நதியைச் சுத்தம் செய்து 512 டன்  குப்பைகளை வெளியேற்றியுள்ளனர்.  அவர்கள் யமுனையை பாதுகாக்கவே விரும்புகின்றனர்

மேலும்  டெல்லி காவல்துறையின் வேண்டுகோளுக்கு இணங்கவே தலைவர்களின் பாதுகாப்பு கருதியும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும் இராணுவம் ஈடுபடுத்தப்பட்டது. இதே போன்றே காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளிலும், கும்பமேளா விழாவிலும் இராணுவம் பயன்படுத்தப் பட்டுள்ளது. 

உலக கலாச்சார விழா நமது கலாச்சாரத்தை, பண்பாட்டை, நாகரிகத்தை உலகுக்கு பறைசாற்றும் விழா, இது நமது தேசத்துக்கு  பெருமை சேர்க்கும். மதிப்பளிக்கும் ஒரு விஷயம் தானே!. எனவே இது குறித்து கம்யுனிஸ்ட்கள் கவலைப் படுவதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால் நம் தேசத்துக்கு பெருமை சேர்க்கும் எந்த ஒரு விசயமும் நமது இராணுவத்துக்கு இழுக்காக முடியாது.

 

சிக்காக்கொ உலக சமய மாநாட்டில் இந்து மத சித்தாந்தம், வேதாந்தம், பண்பாடு, நாகரிகம் , இதிகாசம் உள்ளிட்டவைகளை தழுவிய சுவாமி விவேகனந்தரின் சொற்ப்பொழிவுதான் இந்தியாவின் மீதான உலகத்தின் பார்வையையே மாற்றியது. அன்று முதல்தான் வடக்கு தெற்கு என்று பிரிவினை இல்லாமால் தேசபக்தியால் இந்தியன் என்ற உணர்வு நம்மிடையே வலுவாக மேலோங்கியது என்பதை மறத்தலாகாது.

தமிழ்த் தாமரை VM வெங்கடேஷ்

Leave a Reply