மாவோயிஸ்ட்டு நக்சலைட் தீவிரவாதிகலுக்கு அருந்ததிராய் வெளிப்படையான ஆதரவு தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி அவர் புவனேஸ்வரத்தில் நடந்த விழாவில் கூறியதாவது;

ஜார்க்கண்ட், ஒரிசா, சதீஷ்கார், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் ஏராளமான ஆதிவாசி நிலங்கள் உள்ளன. அவற்றை அரசியல் தலைவர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பணம் பெற்றுக் கொண்டு ஆதிவாசிகள் நிலத்தை வாரி வழங்குவதால் அவர்களை-எதிர்த்து போராடி வருகின்றார்கள்.

ஆதிவாசிகள் இதன் காரணமாக வசிக்க இடமின்றி தவிக்கிறார்கள். ஆதிவாசிகளுக்கு நஷ்டஈடும் வழங்கவில்லை. வட-மாநிலங்களில் ஆதிவாசிகளுகு சொந்தமான நிலங்களை கார்ப்பரேட் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வாரி வழங்குவதை எதிர்த்து மாவோயிஸ்டு மற்றும் நக்சலைட்டுகள் போராடுகிறார்கள்.

அரசியல்வாதிகள் தங்கலது சுயநலனுக்காக பதவியில் உள்ளனர். ஆனால் மாவோயிஸ்டுகள் நாட்டினுடைய முன்னேற்றத்திற்காக போராடும் தியாகிகள் என சொல்லலாம்.

அவர்கள் ஆயுதம்/ஏந்தி போராடுவதை சரி என சொல்லவில்லை. ஆனால் அவர்களுடைய போராட்டம் நியாயமானது என உறுதியாக தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஊழல் பெருகிவிட்டது மற்றும் அரசியல் மிக மட்டமாக ஆகிவிட்டது என்பதற்காக அப்பாவி மக்களை கொல்வது தவறு, மேலும் மாவோயிஸ்டு மற்றும் நக்சலைட்டுகளுக்கு ஆதரவு தெரிவித்து வெளிப்படையாக பேசுவது அதைவிட பெரிய தவறு

Leave a Reply