ஆந்திரவில் மாவோயிஸ்ட் தலைவர் ஆசாத் , பத்திரிக்கையாளர் ஹேமசந்திர பாண்டே ஆகியோர் என்கவுண்டரில் கொல்லப்பட்டதர்க்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது,

சமூக சேவகர் சுவாமி அக்னிவேஷ் மற்றும் பாண்டேயின் மனைவி பபிதா பாண்ட ஆகியோர் இந்த போலி என்கவுண்டர் குறித்து

நீதிவிசாரணை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர், இந்த மனுவை விசாரித்த-நீதிபதிகள் ஆந்திர மற்றும் மத்திய அரசுகளுக்கு விளக்கம்கேட்டு தாக்கீது அனுப்பியுள்ளனர்.

மேலும் ஒரு குடியரசு தனது மக்களையே-கொல்வதை நாம் அனுமதிக்க இயலாது ” என நீதிபதிகள் அஃப்டாப் ஆலம் மற்றும் ஆர்.எம். லோதா ஆகியோர் கறுத்து தெரிவித்துள்ளனர்.

மாவோயிஸ்ட் தலைவர் ஆஸாத் மற்றும் பத்திரிக்கையாளர் பாண்டே ஆகியோர் சர்ச்சைக்குரிய முறையில் கடந்த ஜூலை மாதம் காவல்துறையால் சுட்டு கொல்லப்பட்டனர். பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் உரிமைகள்குழுவின் உண்மைஅறியும் செயல்பாட்டிலும் இது போலி-என்கவுண்டர் என தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது

{qtube vid:=bu3Z8wjuCWQ}

Leave a Reply