பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டம், டில்லியில் இன்றும், நாளையும் நடக்கிறது. லோக் சபா தேர்தலில், தமிழகத்தில், பா.ஜ., யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து, இந்தகூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டம், கடந்த மாதம் நடப்பதாக இருந்தது. கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான, வாஜ்பாய் மறைவைஅடுத்து, இந்தகூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில், இன்று மாலை, 4:00 மணிக்கு, டில்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேசரங்கில், பா.ஜ., தேசிய தலைவர், அமித்ஷா தலைமையில், செயற்குழு கூட்டம் துவங்குகிறது.

மீண்டும், நாளை காலை கூடும் செயற்குழு கூட்டத்தில், பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கிறார். பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், கட்சி நிர்வாகிகள் உட்பட, 350க்கும் அதிகமான தலைவர்கள், செயற் குழு கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.இக்கூட்டத்தில், பல்வேறு முக்கியமுடிவுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. குறிப்பாக, 2019 லோக்சபா தேர்தலில், தமிழகம், தெலுங்கானா மற்றும் ஒடிசாவில், கூட்டணி அமைப்பது தொடர்பாக விவாதிக்கப் படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.-

Leave a Reply