ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதான பல்வாவுக்கும் மத்தியமந்திரி சரத்பவாருக்கும் இடையே நீண்ட காலமாக நெருங்கியதொடர்பு இருப்பதாக சிவசேனா செயல் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார் .

மேலும் அவர் தெரிவித்ததாவது ; பல்வாவுக்கு சாதகமாக சரத்பவார் பலவழிகளிலும் செயல்பட்டு இருக்கிறார், ஓட்டல், ரியல் எஸ்டேட்,

பாந்த்ரா அரசு காலனி திட்டம் போன்ற அனைத்திலும் சரத்பவார், பல்வாவுக்கு உதவி செய்தார் .

பல்வாவின் விமானத்தில் சரத்பவார் பயணம் செய்தற ? என்பது கேள்வி அல்ல. பல்வாவுடன் யார்-விமானத்தில் சென்றாகள் என்பதுதான் கேள்வி. இதற்கு விடை தர வேண்டும்.

பல்வாவுடன் இருக்கும் தொடர்பை சரத்பவார் இதுவரைக்கும் மறுக்கவில்லை. எனக்கு எல்லா விஷயங்களும் தெரியும். யாரும் எதையும் மறைக்க முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்

{qtube vid:=OiZc5U8Idlg}

Leave a Reply