பி.பி.சி செய்தி நிறுவனம் இந்தி மொழியில் சிற்றலை-ரேடியோ சேவையை ரத்து செய்துள்ளது.

லண்டனை தலைமை இடமாக கொண்டு இயங்கும் பி.பி.சி., நிறுவனம், “ரேடியோ, டிவி’, இன்டர்நெட் சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் 25 கோடிக்கும் மேலாக நேயர்கள் உள்ளனர்.

பொருளாதார நெருக்கடியின் காரணமாக, ஆட்குறைப்பு செய்து வருகிறது.இது குறித்து பி.பி.சி.செய்தி நிறுவன இயக்குனர் மார்க்-தாம்சன் தெரிவித்ததாவது , “தவிர்க்க முடியாத காரணங்களினால் இதுவரை 650 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளனர் . தற்போது ஐந்து மொழி-சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது . இந்தி மொழி ரேடியோ சேவை ரத்து-செய்யப்படுகிறது ஆனால் இந்தி மொழியில் “இன்டர்நெட் மற்றும் டிவி’ சேவை வழக்கம்போல் இயங்கும். என தெரிவித்துள்ளார்

Leave a Reply