லட்சக் கணக்கான இந்தியர்களுக்கு தேசப்பற்றை ஊட்டிய, சாவர்க்கரின் தேசியவாதம் குறித்து , சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இது போன்ற நபர்கள் தான், நாட்டை துண்டாட வேண்டுமென, பேசப்படும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். கொள்கை ரீதியில், இது, மிகப் பெரும் சவால்.

இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை இது வரை கூறிவந்தோர், 'பாரத் மாதா கி ஜே' என கூறாவிட்டாலும், 'ஜெய் ஹிந்த்' எனக் கூறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் மூலம், தேசிய வாதம் தொடர்பான கொள்கை ரீதியிலான முதற்கட்டபோரில், பா.ஜ.க, வென்றுள்ளது.

நாட்டை துண்டாடவேண்டுமென பேசுவதை சிலர், கருத்து சுதந்திரம் என்கின்றனர். இது, மிகவும் விந்தைநிலை. எந்த சந்தர்ப்பத்திலும் இதை, அரசியல் சட்டம் அனுமதிக்க வில்லை. இது போன்ற சம்பவம், நாட்டின் தலை நகரில் நடந்து கொண்டிருக்கிறது.

சில நாட்களில், 'ஸ்டேண்ட் அப் இந்தியா' திட்டத்தை, மத்திய அரசு துவக்கவுள்ளது. எஸ்.சி., – எஸ்.டி., பிரிவினர் மற்றும் பெண்கள், தொழில்துவங்கி, தொழிலதிபர்களாக திகழ, இத்திட்டத்தின்கீழ் வங்கிகள், 1 கோடி ரூபாய் கடன் வழங்கும். நாடுமுழுவதும், மக்கள் ஆதரவின்றி, காங்., சுருங்கி கொண்டே செல்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின், 'காங்கிரஸ் அற்ற இந்தியா' வாசகத்தை, பொதுமக்கள் நனவாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


அரசியல் கூட்டணியில் வாலாக இருந்தால்போதும் என, காங்., எண்ணத் துவங்கிவிட்டது. கிரிக்கெட் போட்டியில், 10 அல்லது 11வது பேட்ஸ்மேனாக களமிறங்கினால் போதும் என்பதுபோல், காங்கிரசின் எண்ணம் உள்ளது. பீஹாரில், லாலு, நிதிஷ் குமாருடன், காங்., கூட்டணி சேர்ந்தது. தற்போது, தமிழகதேர்தலில், தி.மு.க.,விடம், காங்., 'சீட்' கேட்டுவருகிறது. இத்தகைய இழிநிலைக்கு, காங்கிரஸ் ., தள்ளப்பட்டு உள்ளது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி

Leave a Reply