பீகார், ஒளரங்காபாத்-மாவட்டம் பச்சோக்கர் கிராமத்தில் பலத்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் 5 குழந்தைகள் உள்பட 7 -பேர் உயிரிழந்துள்ளனர் . 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று நடந்த இறுதி கட்ட வாக்கு பதிவின்போது பெரும் நாசத்தை ஏற்படுத்துவதற்காக மாவோயிஸ்டுகள் இந்த குண்டை வைத்திருந்தனர். போலீஸார் இதை கண்டுபிடித்து விட்டனர். ஆனால் இந்த குண்டை செயலிழக்க வைக்காமல் அப்படியே-அங்கிருந்த வயலில் போட்டு வைத்து இருந்தனர்.

இன்று காலை அதை செயலிழக்கவைக்க பாதுகாப்பு படையினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இன்றுக் காலை வயலுக்கு சென்ற விவசாயிகள் மற்றும் குழந்தைகள் குண்டு இருந்த்தை பார்த்து அருகில் சென்ற போது அது பலத்தசப்தத்துடன் வெடித்து சிதறியது, இதில் 5 குழந்தைகள் உள்பட 7பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Leave a Reply