பிகாரில் நாற்பத்து எட்டு தொகுதிகளுக்குமான முன்றாம்  கட்ட தேர்தலுக்கான வாக்கு பதிவு பலத்த பாதுகாப்புடன் இன்று காலை தொடங்கியது.பிகாரில் 6 கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கின்றது. 2   கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன. மூன்றாவது கட்டமாக இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இத்தேர்தலில் 785 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வைஷாலி மாவட்டத்தின் ரகோபூர் தொகுதியிலும், சரண் மாவட்டத்தின் சோன்பூர் தொகுதியிலும் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ராப்ரிதேவி இன்றைய தேர்தலில் முக்கிய வேட்பாளராவார்.

முன்றாம் கட்டத் தேர்தலில் லோக் ஜனசக்தி 13 தொகுதிகளிலும், ராஷ்ட்ரீய ஜனதாதளம் 35 தொகுதிகளிலும்,  போட்டியிடுகின்றன.ஆளும் ஐக்கிய ஜனதாதளம் 24 தொகுதிகளிலும், பாரதிய ஜனதா 24 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் 48 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

Tags:

Leave a Reply