மத்திய பிரதேச அரசு கல்லூரியில் பேராசிரியராக பனி புரிபவர் ஏ.கே. சவுத்திரி.இவர் அங்கே பயிலும் ஒரு மாணவியுடன் செக்ஸ்தொடர்பு வைத்திருப்பதாக புகார்கள் எழுந்தன . மேலும் ஒரு சில மாணவிகலிடம் செக்ஸ் குறும்பு செய்ததாக தகவல் வெளியானது.

இதை கண்டு வெகுண்டெழுந்த பா ஜ க மாணவர் அணியினர் கல்லூரிக்கு திரண்டு சென்றனர். வகுப்பில்பாடம் எடுத்து கொண்டு இருந்த கல்லூரி பேராசிரியர் சவுத்திரியை வெளியே இழுத்துவந்து சரமாரியாக தாக்கினர்

அவர்களிடம் இருந்து தப்பி கல்லூரி முதல்வர் அறைக்கு ஓடினார். ஆனாலும் அவரை விடாமல் விரட்டி விரட்டி அடித்து உதைத்தனர். கல்லூரி மாணவிகள் தங்கள் செருப்பை கழற்றி அவரை சரமாரியாக அடித்தனர். முகத்தில் கறுப்பு மையை பூசி அவமானப்படுத்தினார்கள்.உடனே மற்ற ஆசிரியர்கள் ஓடி வந்து பேராசிரியரை மீட்டனர்.

Leave a Reply