தொழிலதிபர் ரத்தன் டாடா நீதிபதி அல்ல என பாரதிய ஜனத்தா கருத்து தெரிவித்துள்ளது,
ரத்தன் டாடா மாநிலங்களவை உறுப்பினர் ராஜிவ்-சந்திரசேகருக்கு கடிதம் எழுதினார்  அதில்  பாஜக ஆட்சி காலத்தில்  தொலை தொடர்பு கொள்கையில் ஏராளமான குளறுபடிகள் நடந்ததாகவும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுதொடர்பாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக  கூட்டணி ஆட்சியில் இருந்த  ஆண்டில் இருந்து விசாரணையை  நடத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகர், டாடா நீதிபதி அல்ல. உண்மையில் என்ன நடந்தது என  அவருக்கு தெரிந்திருக்காது என கூறினர் .டாடா வெளிப்படை  தன்மையுடன்  நடந்துகொள்ளவில்லை என்றும், அரசின் தொலைத்தொடர்புக் கொள்கையால் அதிகம் பலனடைந்தவர்களில் ஒருவராக அவர் இருப்பதாகவும் சந்திரசேகர் முன்னதாக குற்றம்சாட்டியிருந்தார்.

Tags:

Leave a Reply