பாரதிய ஜனதா சிறுபான்மையினருக்கு விரோதி இல்லை பயங்கரவாதிகளுக்கும், மத மாற்றத்திற்கும் மட்டுமே விரோதி,” என்று மாநில துணைத்தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார் .

திண்டுக்கலில் அவர் பேசியதாவது : போலீஸ், ஆம்புலன்ஸ் வாகனங்களில் பணம் கொண்டு செல்லபடுவதாக குற்றச்சாட்டு-எழுந்துள்ளது. முதல்வர் தனுடைய தொகுதியில் தன்னை தோற்கடிப்பதற்கு பணம் தரப்படுவதாக கூறுவது, தி.மு.க., தோல்வி பயத்தில் இருக்கிறது என்பதையே காட்டுகிறது.

தமிழகத்தின் கடன் நான்கு ஆண்டுகளுக்குமுன் 64 ஆயிரம் கோடியாக இருந்தது. இப்பொழுது 1 லட்சத்து 60ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது பாரதிய ஜனதா சிறுபான்மையினருக்கு எதிரான கட்சியில்லை. மத மாற்றத்திற்கும், பயங்கரவாதத்திற்கும் எதிரானவர்கள் தான்-நாங்கள். மதிமுக,வின் கொள்கைகளை செயல்படுத்த முனைகின்ற கட்சியாக பாரதிய ஜனதா இருக்கிறது . எனவே எங்கள் கூட்டணிக்குத்தான் அவர்கள் வாக்களிக்க வேண்டும். டாஸ்மாக்கை பூட்டுவேன் என, சபதம் செய்துவிட்டு தற்போது திமுக.,வுடன் கூட்டணி சேர்ந்துள்ளார் ராமதாஸ். இவ்வாறு எச்.ராஜா கூறினார்

Leave a Reply