2-ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரம் குறித்து நாடாளு-மன்றத்தில் விவாதிப்பதால் எந்த பயனும் கிடைக்கபோவது இல்லை என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

2ஜி ஊழல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயாராக இருப்பதாக காங்கிரஸ் சார்பாக தெரிவிக்க பட்டது. ஆனால் இதை பாரதீய ஜனதா ஏற்று கொள்ளவில்லை.

இணையதளத்தில் இது குறித்து சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்திருப்பதாவது:

விலைவாசி உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் பத்துக்கும் மேற்பட்ட விவாதம் நடத்தியாகிவிட்டது. அதனால் இதுவரை எந்த பயனும் கிடைக்கவில்லை. விலை குறையாவும் இல்லை . விலையை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விலைஉயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதால் என்ன பயன் ஏற்ப்பட்டது என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்.

இப்போது 2-ஜி குறித்து விவாதிக்க எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா முன்வரவில்லை என காங்கிரஸ் தரப்பில் குறை கூறி வருகினறனர். விலை உயர்வு குறித்த விவாதத்தால் எந்தப் பயனும் கிட்டவில்லையோ அதேபோலத்தான் 2-ஜி அலைக்கற்றை ஊழல் புகார் குறித்து விவாதிப்பதாலும் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. அதனால் விவாதிப்பதை எல்லாம் நிறுத்திவிட்டு செயலில் இறங்க வேண்டும் என்று பாரதீய ஜனதா வலியுறுத்தி வருகிறது என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார் .

Leave a Reply